சொன்னபடி செய்த ஸ்டாலின்.. நர்ஸ்கள் திறந்து வைத்த.. கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை!

Jun 16, 2023,09:25 AM IST
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அடிக்கல் நாட்டப்பட்டு 15 மாதங்களில் கட்டிமுடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அவருடன் இணைந்து செவிலியர்களும் மருத்துவமனையை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் இந்த உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.



மிகப் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை ரூ. 230 கோடியில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய அதி  நவீன உயர் சிறப்பு மருத்துவ மையமாக உருவெடுத்துள்ளது. சென்னை மாநகருக்கு மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்து மாவட்டங்களுக்கும் இது வரப்பிரசாதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 7 தளங்களுடன் கூடிய இந்த மருத்துவமனையில் அனைத்து உடல் உறுப்புப் பிரிவுகளுக்கும் தனித் தனியாக சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது இதன் விசேஷமாகும்.  மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெயர் இந்த மருத்துவமனைக்கு சூட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.



குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் அவர் வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் ஸ்டாலினே இதைத் திறந்து வைத்துள்ளார். விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கலச் சிலையையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மருத்துவமனை திறப்பு குறித்து ஸ்டாலின் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

மனிதநேய மாண்பாளரான பேரருளாளர் கலைஞர் பெயரில் பதினைந்தே மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட, 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'யைக் கிண்டி 'கிங்' நோய்த்தடுப்பு & ஆராய்ச்சி வளாகத்தில் திறந்து வைத்தேன்.



மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் வர இயலாத நிலையில், கலைஞரைத் தங்கள் நெஞ்சில் ஏந்தியிருக்கும் மக்களில் ஒரு பிரிவினரான செவிலியர்களைக் கொண்டு இந்தத் திறப்பு விழா நடந்தது.

"தென்றலைத் தீண்டியதில்லை நான். தீயைத் தாண்டியிருக்கிறேன்" என்று சோதனை நெருப்பாறுகளைச் சாதனைகளால் கடந்த நூற்றாண்டு நாயகர் கலைஞர் போல் நாமும் சோதனைகளைக் கடந்து சாதனைகள் பல செய்வோம்! கலைஞரின் புகழை நானிலமெங்கும் பரப்பிப் போற்றுவோம் என்று அவர் கூறியுள்ளார்.



சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்