பிறந்தது புனித ஆடி...  ஆடி மாதம்,  அம்மன் மாதம் ஆன கதை இது தான்!

Jul 17, 2023,11:08 AM IST
 சென்னை : ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும், வேப்ப மரம் அம்பாள் குடியிருக்கும் மரமாகவும் ஆனதற்கு புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது. ஆடி பிறப்பு நாளான இன்று, அதை தெரிந்து கொண்டு அம்பிகையை வழிபட்டால் அம்மனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

ஒருமுறை பார்வதி தேவி, சிவ பெருமானின் பிரியாமல் இருக்கும் வரத்தை பெற வேண்டும் என்பதற்காக தவம் செய்வதற்கு பூலோகத்திற்கு சென்று விட்டாள். கைலையில் பார்வதி இல்லாத சமயத்தில் தேவலோக மங்கையான ஆடி என்ற பெண், யாருக்கும் தெரியாமல் பாம்பு உருவம் கொண்டு கைலாயத்திற்குள் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியின் உருவம் கொண்டு, சிவனின் அருகில் சென்றாள். அவள் அருகில் வந்ததும் கசப்பு சுவையை சிவன் உணர்ந்தார்.



வந்திருப்பது பார்வதி இல்லை என தெரிந்து கொண்ட ஈசன், தனது திரிசூலத்தை எடுத்து ஆடியை நோக்கி ஓங்கினார். ஆனால் ஆடி தேவலோக பெண் என்பதாலும், சிவன் மீது தீராத பக்தி கொண்டவள் என்பதாலும் திரிசூலத்தில் இருந்து வெளிப்பட்ட ஒளியால் அவர் புனிதமானாள். ஆனால் கோபமடைந்த சிவன், நீ பூலோகத்தில் கசப்பான மரமாக பிறப்பாய் என சாபம் அளித்தார். ஆனால் ஆடியோ, பார்வதி தேவி உருவத்தில் உங்கள் அருகில் வந்தால் உங்களை வணங்கும் ஒரு நிமிடமாவது உங்களின் அன்பான பார்வை என் மீது படாதா என்ற ஏக்கத்தில் தான் இவ்வாறு தெரியாமல் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள் சுவாமி என சிவனிடம் மன்றாடினாள்.

இருந்தாலும் என் தேவி இல்லாத சமயத்தில் அவளின் உருவத்தில் நீ வந்தது தவறு என சொன்ன சிவன், ஆடி தேவலோக மங்கை என்பதால் அவளின் பெயரில் ஒரு மாதம் ஏற்படும் ஏற்படும் என்றும், அந்த சமயத்தில் கசப்பான மரமான உன்னை மக்கள் வழிபடுவார்கள். அவர்களுக்கு பல நன்மைகளை வழங்கு என வரமளித்தார். கசப்பான என்னை எப்படி சுவாமி மக்கள் வணங்குவார்கள் என சந்தேகமாக கேட்ட ஆடியிடம், கவலைப்படாத உன்னுள் பார்வதி ஐக்கியமாவாள். அதனால் நீ அம்பிகையின் வடிவமாக வணங்கப்படுவாய் என்றார்.

சிவன் அளித்த சாபமே ஆடிக்கு வரமாக மாறியது. அதனால் தான் ஆடி மாதத்தில் அம்பிகையையும், வேப்ப மரத்தையும் மக்கள் வழிபடுகிறார்கள். அதோடு ஆடி மாதத்தில் தான் தவமிருந்த அம்பிகைக்கு சிவ பெருமான் காட்சி கொடுத்து, தன்னை எப்போதும் பிரியாமல் இருக்கும் வரத்தை அருளினார். இந்த நாளே ஆடித்தபசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சங்கரன் கோவிலில் ஆடி தபசு விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்