- ஸ்வர்ணலட்சுமி
ஆடி வெள்ளி சிறப்புகள்: விசுவாவசு வருடம் 20 25 ஜூலை 25ஆம் தேதி ஆடி மாதம் ஒன்பதாம் நாள் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமை. இந்த ஆண்டு ஆடி மாதம் 5 வெள்ளிக்கிழமைகள் வருகிறது .முதல் வெள்ளி ஜூலை பதினெட்டாம் தேதி சிறப்பாக நிறைவடைந்தது தொடர்ந்து, இரண்டாம் வெள்ளி ஜூலை 25, மூன்றாம் வெள்ளி ஆகஸ்ட் 1 ,நான்காம் வெள்ளி ஆகஸ்ட் 8 ,ஐந்தாம் வெள்ளி ஆகஸ்ட் 15 ஆகிய நாட்களில் வருகிறது.
இரண்டாவது ஆடி வெள்ளிக்கிழமையான இன்று அம்பிகையை மங்க மங்கள கௌரி ஆக பாவித்து விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். மூன்றாவது வெள்ளிக்கிழமையில் அம்பாளுக்கு தளிகை வழிபாடு செய்வார்கள். தளிகை என்பது கலவை சாதம் சமைத்து வழிபாடு செய்வது ஆகும் .அதாவது சர்க்கரை பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சம் பழ சாதம், கறிவேப்பிலை சாதம் என ஐந்து வகை சாதங்களை சமைத்து தளிகை செய்வது சிறப்பு .இதனை ஐந்தாவது வாரம் வெள்ளிக்கிழமைகளில் செய்யலாம் .நான்காவது வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி நோன்பு வருவது மிகவும் சிறப்பு. கடைசி வெள்ளி ஆகஸ்ட் 15ஆம் தேதி வருகிறது.

ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனை வழிபட்டு பூஜை செய்வது சிறப்பு .சப்த கன்னிகள், குலதெய்வம், முப்பெரும் தேவியர் என அனைத்து பெண் தெய்வங்களையும் வழிபடுவது சிறந்த பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. பக்தர்களை காப்பதற்காகவே அவதாரம் எடுத்த துர்கா தேவியை வழிபடுவதற்கு இம்மாதம் சிறந்தது.
இவ்வாறு வழிபாடு செய்வதினால் வாழ்க்கையில் இருக்கும் துக்கங்கள் ,துயரங்கள் அனைத்தையும் அம்பாள் அழித்து நல்வாழ்வு நல்குவாள் .மேலும் திருமணம் ஆகாதவர்களுக்கு ஆடி வெள்ளி வழிபாடு செய்வதினால் திருமணம் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடலில் உள்ள நோய்கள் தீரும். நாம் செய்யும் வழிபாடுகளின் மூலம் அம்மன் மனம் குளிர்ந்து நினைத்த காரியங்களை நிறைவேற்றி அருள்வாள்.

அம்மன் கோவில்களில் விளக்கு பூஜை நடைபெறும் .அதில் 108 மகளிர் அமர்ந்து குத்துவிளக்கு ஏற்றி, மலர்களால் அலங்கரித்து, மஞ்சள் பிள்ளையார் வைத்து ,வெற்றிலை பாக்கு ,வாழைப்பழம் வளையல், நெய்வேத்தியம் வைத்து 108 மகாலட்சுமி தாயாரின் அஷ்டோத்திரம் படித்து ,குங்குமத்தினால் அர்ச்சனை செய்து வழிபாடுகள் நடைபெறும். இந்த விளக்கு பூஜையில் கலந்து கொண்டு கன்னிப்பெண்கள், சுமங்கலி பெண்கள் வழிபடுவது அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் ஆடி வெள்ளிக்கிழமை நல்வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}