- கலைவாணி கோபால்
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அதிமுக இன்று தனது பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்களை நடத்துகிறது. இதற்கான தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை அருகே உள்ள வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் சமயம் என்பதாலும் பல முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என்பதாலும் அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
காலை 10.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் கூட்டம் தொடங்கியது. தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். முதலில் செயற்குழுவும், தொடர்ந்து பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறும். 8000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பொதுக்குழு உறுப்பினர்கள் சுமார் 3000 பேருக்கும், செயற்குழு கூட்டம் உறுப்பினர்கள் 2500 பேருக்கும், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் அனைத்தும் சேர்த்து 8000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ் இல்லாமல் வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செயற்குழு மற்றும் பொது குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் மண்டபத்திற்கு உள்ளே செல்ல தனியான வழி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அழைப்பிதழ் இல்லாத தொண்டர்களுக்கு போலீசர்கள் உள்ள செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மயிலாட்டம் மற்றும் ஒயிலாட்டம் போன்ற தமிழக கலாச்சார முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. மொத்த் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}