சென்னை: கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் கோயில் கொடிமரத்தில் கிடந்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல், சென்னை மாநகராட்சி 196-வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

கோயில் முதல் காவலர் குடியிருப்பு வரை எங்குமே பாதுகாப்பற்ற சூழல் இருக்க. தமிழகத்தில் ஆட்சி என ஒன்று எதற்கு தான் இருக்கிறது?
பட்டாக்கத்தி, அரிவாளில் தொடங்கி, துப்பாக்கி, வெடிகுண்டு என தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு.
ஆளத் தெரியாமல், ஒருசில அதிகாரிகளின் கைப்பாவையாகி, காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி, மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் தலைமையிலான Failure மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கோயில் கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் மற்றும் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் வெடிகுண்டு வீசித் தாக்கிய குற்றவாளிகள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க விடியா திமுக மாடல் அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
மாமல்லபுரம் கடற்கரையில் தசாவதாரம்.. இன்று மாலை.. மறக்காமல் பாருங்கள்!
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
{{comments.comment}}