சென்னை: அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய கோட்டூர்புரம் போலீஸார், ஞானசேகரன் என்ற நபரை கடந்த 25ம் தேதி கைது செய்தனர். ஞானசேகரன் போலீசாரிடம் இருந்த தப்ப முயன்ற போது கை, கால்களில் அவருக்கு முறிவு ஏற்பட்ட நிலையில் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழு விசாரித்து வருகிறது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்த ஞானசேகரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் எப்ஐஆர் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது மட்டும் இன்றி சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். 7 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் எழும்பூர் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஞானசேகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து அண்ணா நகர் துணை ஆணையர் சினேக பிரியா ஞானசேகரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நேரில் சென்று கேட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}