சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம், இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ் இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே முமு்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இடையே வார்த்தைப் மோதல் நடத்து வருகிறது.
நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தில் இருமொழி கொள்கையை சிறப்பாக பின்பற்றும் போது, திடீரென மும்மொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றால் அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, பதில் அளித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் 3 மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில் தான் படிக்கிறார். அதனால் பிடிஆருக்கு தானே அறிவில்லை என்று அர்த்தம். அவரது மகன் இந்திய குடிமகனா? அல்லது அமெரிக்க குடிமகனா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் 3 மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளிகளில் தான் படிக்கிறார்கள் என்று பதில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், புதிய கல்வி கொள்கையை இன்றைக்கு நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லை. ஆனால், அதையெல்லாம் விடுத்து 34 அமைச்சர்களின் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் தனியாக கூடுதல் மொழிகளை படிக்கட்டும். பாஜக பிரிதிநிதி ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார். எனது மகன்கள் பெயர் பழனி மற்றும் வேல், அவர்கள் இருவரும் எல்கேஜி முதல் பட்டப்படிப்பு வரை இருமொழியில் தான் படித்தார்கள் என்றார்.
இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில்,
நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன்.
தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் திரு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,
முதல் மொழி: ஆங்கிலம்
இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்
இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?
வெளங்கிடும்
தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 05, 2025... இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும்
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைதி வளம் வளர்ச்சி.. ஜெயலலிதா பாதையில் நடை போடுவோம்.. எடப்பாடி பழனிச்சாமி
நமது ஆசைகள் எப்படி பூர்த்தியாகின்றன? (How to manifest our deepest desires in life?)
திருப்பரங்குன்றம் விவகாரம்.. மதுரை ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து.. உச்சநீதிமன்றத்தை நாடும் தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம்... தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
{{comments.comment}}