சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் நொடிக்கு நொடி விறுவிறுப்படைந்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாட்களுக்கு முன் டில்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த நிலையில் இன்று, பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் சென்று பேசி விட்டு வந்துள்ளார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்று விட்டு வந்த நயினார் நாகேந்திரனிடம் இந்த சந்திப்பின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், இரு கட்சிகளுக்கும் இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமான முறையில் நடந்து முடிந்தது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கிறேன். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆலோசனை செய்ததாகவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 28ம் திதியன்று தமிழகம் வரவிருக்கிறார். பிரதமரின் தமிழக வருகையின் போது கன்னியாகுமரியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பிரதமர் தமிழகம் வருவதற்கு முன்பாக தமிழகத்தில் என்டிஏ கூட்டணி முடிவாகி விட வேண்டும். கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக மேடை ஏற்றி தங்களின் பலத்தை காட்ட வேண்டும் என பாஜக நினைக்கிறது.
இதன் முன்னோட்டமாக தான் இன்று நயினார் நாகேந்திரன், இபிஎஸ்.,ஐ சென்று சந்தித்திருப்பது என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கடலூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் அறிவிக்க உள்ளார். ஏற்கனவே அன்புமணி தரப்பு பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்து விட்டதால் விரைவில் டாக்டர் ராமதாஸ் தரப்பையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் அதிமுக, பாஜக கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}