சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக பல பகுதிகளில் நேற்று இரவிலிருந்து மழை பெய்து வருகிறது. இதில் சென்னை மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் புறநகர்ப் பகுதி மாவட்டங்களில் விடுமுறை விடப்படாததால் மாணவ, மாணவியர் நனைந்தபடி பள்ளி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவே மழை தொடங்கி விட்டது. நகர்ப் பகுதிகளில் பரவலாக கன மழையும், மித மழையுமாக விடிய விடிய பெய்து வருகிறது. அதேபோல புறநகர்களிலும் மழை இருந்து வருகிறது. வட பகுதிகளில்தான் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. பெருங்குடியில்தான் அதிக அளவாக 7 .8 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. அதேபோல உத்தண்டி 5.1, சோழிங்கநல்லூர் 5 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது. பெரிய அளவிலான மழையாக இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊரே ஊரக்காடாகியுள்ளது. சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், சுரங்கப் பாதைகள் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை.

மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேசமயம், புறநகர்களில் வரும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை விடப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் கஷ்டப்பட்டு நனைந்தபடி போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது பெற்றோர்களையும் புலம்ப வைத்தது. சென்னையைப் போலவே இங்கும் விடுமுறை அளித்திருக்கலாம் என்று அவர்கள் குமுறினர்.

சென்னை நகரில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமாகவும், சில இடங்களில் கன மழையாகவும் இது உள்ளதால் அலுவலகம் செல்வோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கிடையே இன்று முதல் ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அடுத்து வரும் நாட்கள் ஈர நாட்களாகவே இருக்கும்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் சென்னை மாநகராட்சியும், இதர துறைகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
மாமல்லபுரத்தில் களை கட்டிய நாட்டிய விழா.. நாளை என்ன ஸ்பெஷல் தெரியுமா?
புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்....தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி சரிவு
{{comments.comment}}