சென்னை: நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதிகளிடையே சமரசம் பேச குடும்ப நல நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களை தந்து தனது நடிப்பின் திறமையால் தனக்கென்ற தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டு அனைத்து தரப்பு மக்களிடையும் பாராட்டைப் பெற்றவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே நடிகர் ஜெயம் ரவி செப்டம்பர் ஒன்பதாம் தேதி மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி நிலவியது. ஆனால் ஆர்த்தி ஜெயம் ரவி தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்ததாக கூறியிருந்தார். இருப்பினும் ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்து, மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தருமாறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சமரச மையத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குடும்ப நல நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆர்த்தி - ஜெயம் ரவி தம்பதி இருவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}