25 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சென்னை பிரஸ் கிளப் தேர்தல்.. சட்டசபைத் தேர்தலையும் மிஞ்சிய பரபரப்பு!

Dec 16, 2024,12:14 PM IST

சென்னை : சென்னை பிரஸ் கிளப் எனப்படும் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்திற்கு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சட்டசபைத் தேர்தல், நடிகர் சங்கத் தேர்தலின்போது என்ன மாதிரியான பரபரப்பும், விறுவிறுப்பும் நிலவியதோ கிட்டத்தட்ட அதே மாதிரியான சூழல்தான் இந்த தேர்தலிலும் காணப்பட்டது.


1972ம் ஆண்டு துவங்கப்பட்ட சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு, 1999ம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பிறகு தேர்தலை நடைபெறாமல் இருந்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இப்போதுதான் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையிலான குழு இந்த தேர்தலை நடத்தியது.




மூத்த பத்திரிகையாளரான மறைந்த மோகன் உள்ளிட்டோர் மேற்கொண்ட வழக்கு, சட்டப் போராட்டத்தின் விளைவாக தற்போது சென்னை பிரஸ் கிளப்புக்கு தேர்தல் நடந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தற்போது சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் 1502 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர். டிசம்பர் 15ம் தேதியான நேற்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி, நடைபெற்றது. இதில் மொத்தம் 91.21 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகின. 1371 பேர் இந்த தேர்தலில் வாக்களித்த நிலையில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து, ஓட்டுக்கள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


இதில் சுரேஷ் வேதநாயகம் (தினகரன்) 659 ஓட்டுக்கள் பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 599 ஓட்டுக்கள் பெற்ற மதன் (நியூஸ் 18 தமிழ்நாடு) மற்றும் சுந்தர பாரதி (புதிய தலைமுறை) ஆகியோர்  துணை தலைவர்களாகவும், 734 ஓட்டுக்கள் பெற்ற அசீப் முகமது (அரண் செய்) பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 


பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட மணிகண்டன் (ஜெயா டிவி) 803 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நெல்சன் சேவியர் (ஒன் இந்தியா தமிழ்) துணை செயலாளர், அகிலா ஈஸ்வரன் (தி இந்து) பழனிவேல் (பாலிமர் டிவி), விஜய கோபால் (ஏஎன்ஐ), பி.ஸ்டாலின்(புதிய தலைமுறை டிவி), கவாஸ்கர் (தீக்கதிர்) ஆகியோர் சங்க உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


இத்தேர்தலில் ஒற்றுமை அணி, நீதிக்கான அணி மற்றும் மாற்றத்திற்கான அணி என 3 அணிகளும், சுயேச்சையாக சிலரும் என 40க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டனர். வெற்ற பெற்ற நிர்வாகிகளில் கவாஸ்கர் மட்டும் ஒற்றுமை அணியைச் சேர்ந்த வேட்பாளர். மற்ற அனைவருமே நீதிக்கான அணி சார்பில் போட்டியிட்டவர்கள்.


வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வாக்குப் பதிவு நடந்த பிரஸ் கிளப் பகுதியில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் தேர்தல் நடந்து முடிந்துள்ளது பத்திரிகையாளர்களுக்கு பெருத்த மகிழ்வைக் கொடுத்துள்ளது. மேலும் புதிய நிர்வாகம் அமைந்திருப்பதால் பத்திரிகையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நல்ல தீர்வுகள் கிடைக்க இந்த நிர்வாகம் உழைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

"டிரம்ப் பெருங்கடல்" : பெருங்கடல்களின் பெயரை மாற்ற டொனால்ட் டிரம்ப் புதிய திட்டம்!

news

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி, முதல்வர் விஜய்க்கு எஸ்பி வேலுமணி நன்றி!

news

Navaratri 2026 Special: வருஷத்துக்கு நான்கு நவராத்திரி வரும்.. இது தெரியுமா உங்களுக்கு?

news

Cooking Tips: ராகி + பால் + நட்ஸ் கஞ்சி.. healthy food.. Tips by G Yasmin!

news

நம் மகளின் புன்னகையில் நல்வாழ்வு மலரட்டும்!

news

D Rajitha Poem.. கிடைக்காத பேருந்து!

news

நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!

news

Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை

news

மகன் .. அழகிய செடிக்கு மலரை அளிக்கும் உயிர் படைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்