சென்னை: வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை. நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், உங்கள் வேர் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ‘அயலகத் தமிழர் தினம் - 2026 ’ விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் நிறைவு நாளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக இந்த விழா நடத்தப்படுகிறது. நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், உங்கள் வேர் தமிழ்நாட்டில் தான் உள்ளது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதுவர்கள்.

நாம் யாராலும் பிரிக்க முடியாத சொந்தங்கள், இது பல்லாண்டு கால சொந்தம். கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. 70 நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தமிழர்கள் வந்திருக்கிறார்கள். நாம் அனைவரும் தமிழ் சொந்தங்கள், தமிழின சொந்தங்கள். வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை.
புலம்பெயர்ந்த தமிழர்களின் குறைகளைக் களையவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் இந்த வாரியம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தற்போது தொழில்துறையில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும். கீழடி கண்டுப்பிடிப்புகள் மூலம் நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகியுள்ளது. கீழடியில் நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இளம் தலைமுறை தமிழர்கள் தங்களின் பூர்வீகத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘வேர்களைத் தேடி’ என்ற திட்டத்தின் மூலம், மாணவர்கள் தமிழ்நாட்டிற்குச் சுற்றுப்பயணம் வந்து நமது கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும், பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும், அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
காவி கட்டி சாந்தம் சொன்ன வீரத்துறவியே!
பைரவும் அபியும்!
சேலத்தில் களை கட்டும் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோயில் பெருவிழா
தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களே இல்லை... திமுக ஆட்சியில் யாருமே பாதுகாப்பை உணரவில்லை: அண்ணாமலை
"நாம்" என்பதால் நான் செதுக்கப்பட்டபோதும்.. "நான்" ஆகவே நிலைத்திருந்தேன்.. I!
பாஜகவினர் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: செல்வபெருந்தகை பேட்டி!
வெளிநாடுகளில் இருந்தாலும் அயலக தமிழர்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மலரும் மனது!
வானத்து தாரகையின் கண்களிலிருந்து.. தாரை தாரையாய்.. The Crying Bride in the Sky
{{comments.comment}}