திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை சேர்க்க மறுத்தார் இபிஎஸ்.. சி.வி.சண்முகம் காட்டம்

May 19, 2026,06:26 PM IST

சென்னை: எல்லோரும் பேசலாம் வாங்க என்று கூறி விட்டு தொடர்ந்து நீக்கி வருகிறார் இபிஎஸ். திருந்தி வந்த ஓபிஎஸ் உள்ளிட்டோரை சேர்த்திருந்தால், இன்னேரம் இபிஎஸ் முதல்வராக இருந்திருப்பார் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.


அதிமுகவில் பிளவு வெடித்துள்ளது. சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழு தனியாக செயல்படுகிறது. இவர்களிடம் 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். மீதமுள்ள 22 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ளனர்.


இந்த நிலையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கூட்டியிருந்தார். இந்தச் சூழலில் மறுபக்கம் சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன் பிறகு அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிவி சண்முகம் கூறுகையில், 




எல்லோரையும் ஒருங்கிணைப்போம், ஒற்றுமையுடன் செயல்படுவோம். மீண்டும் அதிமுக ஆள வேண்டும். பொதுக்குழுவைக் கூட்டுவோம்.  பேசலாம் என்று சொல்கிறார் இபிஎஸ். ஆனால் மறுபக்கம் அனைவரையும் நீக்குகிறார். இதுவரை 31 மாவட்டச் செயலாளர்களை நீக்கியுள்ளார். 


தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவுடன் கூட்டணிக்கு மறுத்து விட்டார். தேர்தலுக்கு முன்பு திருந்தி வந்த ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க மறுத்து விட்டார். அரை பர்சன்டேஜ் கட்சி என்று கூறி தேமுதிகவையும் கூட்டணியில் சேர்க்க மறுத்து விட்டார். தவறு செய்தவர்களை மன்னித்து கட்சியில் சேர்த்திருந்தால் இன்னேரம் இபிஎஸ் கண்ணசைவில் ஆட்சி அமைந்திருக்கும். அவரும் முதல்வராகியிருப்பார்.


தனக்கு ஆதரவாக கையெழுத்துப் போட மறுத்தால் பதவி பறிக்கப்படும் என்று நிர்வாகிகளிடம் சொல்கிறார். கையெழுத்திட்டால் பதவி பறிப்பு என அச்சுறுத்துகிறார். இப்படி அச்சுறுத்தினால் கட்சி எப்படி வளரும். அன்பாக பாசத்துடன் அரவணைத்துச் செல்ல வேண்டும். தட்டிக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு: 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவு

news

Chettinad Recipes: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி சமையல்.. காரசாரமான பூண்டு ஊறுகாய்!

news

ADMK: அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை

news

"நான் வெளிநாட்டில் இருந்தாலும் என் மனம் அறிவாலயத்தில் தான் இருக்கும்" – மு.க.ஸ்டாலின் உருக்கம்!

news

சகோதரரை வீடு புகுந்து தாக்கிய வழக்கு: அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை

news

Nainar Nagendran: ஆளுநர் அர்லேகரை திடீரென சந்தித்த பாஜக நிர்வாகிகள்.. இது தான் விஷயமா?

news

CV Shanmugam: தவெக-வில் இணைகிறாரா சி.வி.சண்முகம்? ஆலோசனையில் பங்கேற்ற அந்த விஐபி!

news

Tamil Poem: இந்தத் துறவியின் வேஷம் கலைத்தேன்!

news

Tamil Poem: ஒரு இதயத்தின் காதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்