பிரதமர் மோடிக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு.. விசாரணை 29ம் தேதி ஒத்திவைப்பு!

Apr 26, 2024,03:58 PM IST

டெல்லி: மதத்தை தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்ததால், தேர்தலில் போட்டியிட பிரதமர் நரேந்திர மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என கோரி வழக்கறிஞர் ஜோன்டேல் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் முடிவடைந்து விட்ட நிலையில் இன்று 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில்,  பிரதமர் மோடி மத ரீதியாக பேசி வாக்காளர்களைத் திசை திருப்புவதாகவும், அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 




அதில், உத்திரப்பிரதேசத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மதம் தொடர்பாக பேசியும், அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதாகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து குரு பிரதிநிதிகளை அழைத்து வந்ததாகவும்  கூறி பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசின் செலவில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் பயணித்துச் சென்று வாக்காளர்களிடையே மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்திய  தண்டனைச் சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் பிரதமருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951ன் கீழ்  அவரை தேர்தலில் இருந்து 6 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யவும் வழக்கறிஞர் ஜோன்டேல் கூறியுள்ளா். டெல்லி உயர்நீதிமன்றத்தில்  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரிக்க வேண்டிய நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்திருந்ததால், விசாரணை வரும் 29ம்  தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்