தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கோலப்போட்டிகளுடன் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது .
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து பதினோராவது ஆண்டாக தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார் உரையாற்றினார் .

தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவரும் உங்கள் அண்ணன் அக்காவிடம் கூறி வாக்களிக்க சொல்லுங்கள். 17 வயது ஆகியிருந்தால் இப்பொழுதே புதிய வாக்காளராக விண்ணப்பம் அளிக்கலாம். முன்பு இருந்த நடைமுறை இல்லாமல் தற்பொழுது வருடம் முழுவதும் வாக்காளர் ஆவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வருடத்தின் முதல் மாதமான ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படுகிறது.புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நாளாக ஜனவரி 25ஆம் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நாளாக தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. படித்தவர்கள் அனைவரும் வாக்களித்தால் நல்லவர்களை நாம் தேர்ந்தெடுக்க வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.

படித்தவர்கள் அனைவரும் கடமையை அவசியம் தவறாமல் செய்ய வேண்டும். வாக்களிப்பது மிகவும் முக்கியமானது. ஐந்து வருடங்கள் தானே என்று நாம சாதாரணமாக இருந்துவிடக் கூடாது.
ஐந்து வருடங்களில் எடுக்கப்படும் முடிவுகளும், சட்டங்களும் தான் பிற்காலத்தில் நாட்டை நல்ல பாதையில் கொண்டு செல்ல வழிவகுக்கும்.எனவே ஐந்து வருடமா என்று யோசிக்காமல் உங்கள் பெற்றோரிடமும், உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடம் கூறி வாக்களிக்க சொல்லுங்கள். தேர்தல் நாள் அன்று உங்கள் வீட்டில் உள்ள அனைவரையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்களிக்க சொல்லுங்கள்.
நல்லவர்களை தேர்ந்தெடுக்க ஓட்டுக்கு பணம் வாங்காமல் நல்ல முறையில் வாக்களிப்பதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை நீங்கள் பள்ளியில் வரைந்திருந்த கோலங்களும், ஓவியங்களும் மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள் என்று கூறினார்.

முன்னதாக வாக்காளர் உறுதி மொழியை வருவாய் கோட்டாட்சியர் கூற மாணவர்களும் ,ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கவிதை, பேச்சு போட்டியில் மாணவர்கள் குகன், நந்தனா, ரித்திகா, லெட்சுமி, தீபா ஆகியோரும், ஓவிய போட்டியில் சுபிக்ஷன், பாலமுருகன், ஜெயஸ்ரீ ஆகியோரும், கோலப்போட்டியில் அபர்ணா, கவிஷா, ஏஞ்சல் ஜாய், ரித்திகா ஆகியோரும் பரிசு பெற்றனர்.
ரங்கோலி போட்டியில் மாணவிகளுடன் மாணவர்களும் கோலம் வரைந்து அசத்தினார்கள்.சுமார் 25-க்கும் மேற்பட்ட கோலங்கள் போடப்பட்டன. இவிவிழாவின் முடிவில், ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.
கனவு மெய்ப்பட வேண்டும்!
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
"அர்ஜுன் சொன்னது பாதி உண்மைதான்".. (நீ மழை.. 3)
சென்னைஒன் செயலி தொழில்நுட்பக் கோளாறு சரியானது.. எம்டிசி நிறுவனம் அறிவிப்பு
61 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா.. உலகக் கோப்பை போட்டிகளில் 16வது வெற்றி
பாகிஸ்தான் பந்து வீச்சை வச்சு செய்த இஷான் கிஷன் அவுட்.. ஆனாலும் இந்தியா ஸ்டிராங்!
நவி மும்பை தமிழ் சங்க பொன்விழா.. விஜய் டிவி ஸ்டார்களின் இசை மழையில் நனைந்த ரசிகர்கள்!
சிவமே சிவமே அருள்வாய் சிவமே....!
அனல் பறக்கப் போகும் இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. கொழும்பு டி20 போட்டியில் மழை குறுக்கிடுமா?
{{comments.comment}}