விருதுநகர்: விஜபி தொகுதியான விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளரும், மறைந்த விஜயகாந்த்தின் மகனுமான விஜய பிரபாகரன் முன்னிலை பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் உள்ளார். மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன். இவர் அரசியலுக்குள் நுழைந்ததுமே நேரடியாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதியவர் என்றாலும் அப்பா விஜயகாந்தின் செல்வாக்கை முன் வைத்து களம் காண்கிறார்.

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார்.அது மட்டும் இன்றி ஏற்கனவே சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் மாணிக்க தாகூரும் போட்டியிடுகிறார். விஐபி தொகுதியான விருதுநகரில் மும்முனையில் கடுமையான போட்டி நடைபெற்று வருகிறது.
யார் மகுடம் சூட்டுவார்கள் என்று தெரியாமல் இருந்த நிலையில், விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை உள்ளார். 2வது சுற்று முடிவில் விஜய பிரபாகரன் 19,680 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். விஜயகாந்தின் மறைவு காரணமாக அனுதாப ஓட்டுகள் விஜய பிரபாகரனுக்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்து போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் 19,493 வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். ஓட்டு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் டிரெண்ட் போகப் போகத்தான் யார் வெல்லப் போகிறார் என்பது தெளிவாகும்.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}