Dr Latha Poems: நம்பிக்கை என்னும் சிறகு முளைத்தால்.. நலிவு எல்லாம் நொடியில் மறையும்!

May 09, 2026,04:19 PM IST

- டாக்டர் கோ. லதா


மண்ணை உழுது மழைக்கு காத்திருப்போம்

வித்தை விதைத்து விளைச்சல் காண்போம்

உழவன் உழைப்பே உலகின் உணவாம்

உண்ணும் சோற்றில் உயிர் கலந்திருக்கும்


கலப்பை பிடித்த கரங்கள் களைப்பறியா

காவிரி நீர்போல் கடமை தவறா

வேர்வை சிந்தி விளைநிலம் பண்பட

வையம் முழுவதும் வாழ்வு பெருகும்


பசுமை போர்த்த பண்ணை வீடே

பஞ்சம் அறியா பாரின் பெருமை 

தொழில் தாழ்ந்தது என்று எண்ணாதே

தொன்மை மிக்க தொழிலே பயிர்த்தொழில்


இயற்கை அன்னையின் இதயம் நிலமே

இணைந்து பழகு இன்பம் பெருகும்

விதையும் வியர்வையும் வீண் போகாது 

விளையும் பயிரில் வாழ்வு துளிர்க்கும்


--


நம்பிக்கையின் சிறகு.. 




நம்பிக்கை என்னும் சிறகு முளைத்தால்

நலிவு எல்லாம் நொடியில் மறையும்

இருள் சூழ்ந்தாலும் இதயம் தளராது

இறையருள் துணையாய் வழி காட்டும்.


தோல்வி வந்தாலும் துவள வேண்டாம்

துன்பம் பெருகினும் துணிந்து நில்லடா

விதைத்த விசுவாசம் வீண் போகாது

விளைவு காலத்தில் வெற்றி தரும்


கனவு காண்பவன் கலங்க மாட்டான்

கடலும் வழிவிடும் கரையும் அடைவான்

நம்பிக்கை சிறகாய் நாமும் பறப்போம்

நாளை நலமாய் நமக்கு மலரும்


-


பாசத்தில் பாவம் தவிர்த்திடு

 

பாசம் என்பது பந்தம் ஆகுமே

பாவம் சேர்ந்தால் பந்தம் அறுமே

உறவு கொள்ளும் உள்ளம் தூய்மையாய்

உண்மை நெறியில் உயர்ந்து நில்லடா


அன்பு காட்டு அறம் தவறாமல்

ஆசை வளர்த்து அழிவு கொள்ளாதே

பெற்றோர் மீதும் பிள்ளை மீதும்

பிணைப்பு கொள்வாய் பிழை இல்லாமல்


கணவன் மனைவி கடமை மறவாதே

காதல் பெயரால் கண்ணீர் விடாதே

நட்பு என்றாலும் நாணம் காக்க

நல்வழி செல்லும் நல்லுள்ளம் கொள்ளு


பாசம் மிகுந்தால் பாதை மாறுமே

பாவம் சேர்ந்தால் பரமன் விலகுமே

அறநெறி நின்று அன்பு செய்தால்

ஆனந்தம் நிலைக்கும் ஆன்மா வாழுமே


-


பிச்சையிலும் உதவி செய்...


பிச்சை எடுத்தாலும் பிறருக்கு உதவு

பெற்றது கொண்டு பேதம் மறந்து

உள்ளம் நிறைந்தால் உதவி வளரும்

உதிரம் போல உயிருக்கு பயணம்


உண்டி கொடுத்தால் உயிர் காப்பாய் 

உடை கொடுத்தால் உடல் மறைப்பாய்

சொல்லால் ஆறுதல் சொல்லும் போதே 

சோர்ந்த மனதில் தெம்பு மலரும்


 கையில் இல்லையென கவலை கொள்ளாதே

 கனிவு ஒன்றே கருணை ஆகும்

 பிச்சை பாத்திரம் பிடித்த கையும்

 பிறர்துயர் தீர்க்க பெரிய கையாள்.


 நீ கொடுப்பது நிறைய அல்ல 

நெஞ்சம் கொடுப்பது நிறைவே ஆகும்

 பிச்சையிலும் உதவி செய் என்பார்

 பெரியோர் வாக்கு பேணி நடப்போமே


-


உலக செஞ்சிலுவை தினம்


மே எட்டு வந்தது மகிமை தினம்  

மனிதம் வாழும் செஞ்சிலுவை நாள்  

இரத்தம் சிந்தி இன்னுயிர் காத்த  

இரக்கம் ஒன்றே கொடியாய் ஏந்தும்  


போரில் காயம் பட்டோர் பக்கம்  

புயலில் சிக்கி தவித்தோர் பக்கம்  

நோயில் வீழ்ந்து நலிந்தோர் பக்கம்  

நொடியும் தாமதம் இல்லா பணி  


சாதி மதம் பாராது சேவை  

சமாய் அனைவர்கும் கருணை  

உலகம் எங்கும் ஒரே குடும்பம்  

உயிரை காக்கும் உன்னத நெஞ்சம்  


செஞ்சிலுவை என்பது சின்னம் அன்று  

சேவையின் ஆழம் சொல்லும் அடையாளம்  

துன்பம் வரும்போது துணை நிற்கும்  

தொண்டின் பெருமை உலகம் அறியும்  


மனிதம் வாழ மனிதர் வேண்டும்  

மருந்தாய் ஆக மனமும் வேண்டும்  

உலக செஞ்சிலுவை தினம் இன்று  

உதவி செய்யும் உறுதி கொள்வோம்


-


உலக அன்னையர் தினம்




உலக அன்னையர் தினம் இன்று  

உயிரை ஈந்த தாயை போற்றும்  

பத்து மாதம் சுமந்த பாசம்  

பாரில் எந்த பொருளும் ஈடு ஆகாது  


தூக்கம் தொலைத்து காத்து நின்றாள்  

துயர் வந்தாலும் தாங்கி நின்றாள்  

பசி என்றாலும் தான் மறந்து  

பிள்ளை பசிக்கு உணவு ஊட்டினாள்  


கண்ணீர் வந்தால் துடைத்து விட்டு  

கவலை தீர கதை சொல்வாள்  

தடுமாறினால் கை பிடித்து  

தரணி காட்டி வழி நடத்துவாள்  


சொல்லில் அடங்கா தியாகம் அவள்  

சொந்தம் என்றும் மாறா அன்பு  

உலகில் தெய்வம் என்றால் அது  

உருவம் கொண்ட தாயே அன்றோ  


பிள்ளை வளர பாடு பட்டு  

பேரும் புகழும் தேடா தாய்  

தன் வாழ்வை எல்லாம் அர்பணித்து  

தலைமுறைக்கு வித்து ஆனாள்  


உலக அன்னையர் தினம் இன்று  

உளமார வாழ்தி நன்றி சொல்வோம்  

தாயின் மடியே பள்ளி என்று  

தரணி போற்றும் உண்மை அதுவே


--


புறம் பேசுதல் வேண்டாம்

 

புறம் பேசுதல் வேண்டாம் நண்பா

புண்ணியம் எல்லாம் போய் விடும் 

ஒருவர் குற்றம் பேசி வாழ்வது 

ஒழுக்கம் அல்ல வாழ்வு அல்ல 


நாவால் சுட்ட வடு ஆறாது 

நெஞ்சில் பாய்ந்த அம்பு போலே 

புறம் பேசி புகழ் தேடாதே 

புண்ணியம் கெட்டு பால் ஆவாய் 


உன்னை நீயேசீர் தூக்கிப் பார்

உன்னில் குற்றம் இல்லையோ

மற்றவர் குறை பேசும் முன்னே

மனதை செம்மை செய்து கொள்


புறம் பேசாத நாவு பெரியது

புனிதம் நிறைந்த வாய் பெரியது 

அமைதி கொண்டு வாழ்ந்தால் போதும்

அன்பு ஒன்றே அறம் ஆகும்


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்

news

DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!

news

மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்

news

சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!

news

தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

news

தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்

news

நரை வந்தபோதும் கரைதொட்டு மோதுவதும்.. ஆதலால் காதல் செய்வீர்!

news

இரண்டெழுத்து மந்திரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்