நைதல் அகற்றிடு.. நொந்திடல் வெறுத்திடு .. டாக்டர் லதா கவிதைகள்!

May 02, 2026,04:49 PM IST

- முனைவர் கோ.லதா


இன்று உலக டுனா தினம் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்லாமல், சகோதரன் தினமும் இன்று கொண்டாடப்படுகிறது.


இதையெல்லாம் வைத்து டாக்டர் லதா எழுதிய கவிதைகளின் தொகுப்பு:


உலக டுனா தினம்!


ஆழ்கடல் அலையில் ஆடும்  

அழகிய டுனா மீனே  

வெள்ளி நிறத்தில் மின்னும்  

வேக நீச்சல் வீரனே  


நீலப் பெருங்கடல் மைந்தன்  

நீந்திடும் அழகை கண்டு  

வலை விரித்து மனிதன்  

வளத்தை அழித்தல் நன்றோ  




உணவாய் உயிராய் நின்று  

உலக மக்கள் வாழ்வில்  

ஏழு கோடி உள்ளம்  

ஏந்திடும் தொழில் நீயே  


அதிக வேட்டை ஆபத்து  

அழிந்திடும் இனம் காப்போம்  

நிலையான மீன்பிடி முறை  

நெறியாய் பின்பற்ற வேண்டும்  


ஐநா சபை அறிவித்த  

உயர்ந்த மே இரண்டில்  

டுனா தினம் கொண்டாடி  

தூய விழிப்புணர்வு கொள்வோம்  


கடல் வளம் காத்தால்  

கனிவான எதிர்காலம்  

நாளைய தலைமுறைக்கும்  

நல்லுணவு கிடைத்திடுமே


--


சகோதரன் தினம்


தொப்புள் கொடி உறவல்ல  

தோளோடு தோள் நின்ற  

உதிர பந்தம் இல்லை  

உயிரின் பந்தம் நீ  


அன்னை வயிறு பகிரா  

அன்பின் வயலில் முளைத்த  

சண்டைகள் போட்டாலும்  

சாயாத நட்பு நீ  


முதல் நண்பன் நீதானே  

முறிந்தாலும் ஒட்டிடுவாய்  

கண்ணீர் துடைக்கும் கையாய்  

கவலை பகிரும் தோளாய்  


தவறுகள் செய்யும் போதும்  

தட்டிக் கொடுத்து திருத்தும்  

விழும்போது தாங்கிடும்  

விண்ணுலக தூண் நீயே  


விளையாட்டில் எதிரியாய்  

வெற்றியில் உடன்பிறப்பாய்  

தோல்வியில் துணையாய் நின்று  

தோள்கொடுக்கும் உறவே  


மே இரண்டு நாளில்  

மேன்மை உறவை போற்றி  

சகோதர தினம் கொண்டாடி  

சந்தோஷம் பகிர்வோம் வாரீர்


--



நைதல் அகற்றிடு

 

நெய்தல் என்னும் இருளை 

நெஞ்சில் வைத்தல் ஆகாது

கவலை சுமைகள் இறக்கி

கருணை வழியில் நடப்போம் 


பாடும் முகத்தில் ஒளியே

வாய்மை மொழியால் ஏற்று

துன்பம் தொடர்ந்து வந்தால்

துணிவே துணையாய் நிற்கும்


நேற்றை மறந்து நாளை

நம்பி எழுந்து வாழ்வோம்

நைதல் அகற்றி உள்ளம்

நல்ல ஒளியில் நிறைப்போம்


முயற்சி விதையை விதைத்தால்

முளைக்கும் வெற்றி கனியே

நைதல் விலக்கி வாழ்வில்

நன்மை விளைத்து மகிழ்வோம்


--


சர்வதேச ஹாரிபாட்டர் தினம்




மின்னல் வடுவுடன் பிறந்த  

மீளா கதையின் நாயகன்  

மாய உலகின் வாசல்  

மந்திர கோல் ஏந்தினன்  


ஹாக்வார்ட்ஸ் கோட்டை அழைத்தது  

ஹாட் தேர்ந்தெடுத்த இல்லம்  

கிரிஃபிண்டார் வீரம் கொண்டு  

கீர்த்தி பெற்ற சிறுவன்  


ஹெர்மாயினி அறிவின் சுடரே  

ரான் நட்பின் உறவே  

மூவரும் சேர்ந்து நின்று  

முடிச்சுகள் அவிழ்த்த வரலாறு  


வோல்டெமார்ட் இருளை எதிர்த்து  

வெளிச்சம் தந்த போராளி  

அன்பே பெரும் மந்திரம்  

அழிவில்லா வலிமை என்றான்  


மே இரண்டு நாளில்  

மாபெரும் போர் முடிந்தது  

தீமை வீழ்ந்து ஒளிர்ந்தது  

தீரத்தின் வெற்றி தினமே  


புத்தகம் கடந்து திரையில்  

புகழ்பெற்ற காவியம் இது  

தலைமுறைகள் கடந்தும் வாழும்  

தன்னிகரில்லா மாயம்


--


நொந்திடல் வெறுத்திடு 


நொந்திடல் வேண்டாம் தோழா

நோயாய் மாறும் மனமே

துன்பம் வந்தால் துணிவே 

தோளாய் நின்று காத்திடும் 


அழுது புலம்பல் வேண்டா

அடுத்த அடியை எடுத்திடு

விழுந்த இடத்தில் எழுந்து

விண்ணை தொடவே முயல்வாய்


நேற்று வலிகள் மறந்து

நேர்மை வழியில் நடப்போம்

நொந்திடல் வெறுத்து உள்ளம்

நம்பிக்கை ஒளியால் நிரப்பு,


வெற்றி தோல்வி இரண்டும்

வாழ்வின் படிகள் தானே

நொந்திடல் இன்றி வாழ்ந்தால்

நிம்மதி என்றும் உனதே


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Results 2026: தேர்தல் ரிசல்ட் 2 நாட்களில்... 'வார் ரூம்களை' வலுப்படுத்தும் திமுக - அதிமுக

news

என்னாச்சு இவங்களுக்கு? இப்படி பேசுறாங்க... அப்போ ரிசல்ட் அப்படி தான் இருக்குமா?

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

பசுமை மாறா நினைவுகள்.. நாவல் பழமும்.. ஆற்றில் அடித்துக் கொண்டு போன மரமும்!

news

அடிக்கிற வெயிலுக்கு.. டென்ஷனாகாதீங்க பாஸ்.. இந்த ஜோக்ஸ் படிங்க.. ஜில்லுனு ஆயிடுவீங்க!

news

கண்ணும் கண்ணும் நோக்கினால்!

news

அனல் பறக்கத் தொடங்கியுள்ள .. மே மாதம்.. என்னவெல்லாம் காத்திருக்கு தெரியுமா?

news

ஆப்பிளை சுவைத்தபடி.. ராவி ஆற்றங்கரை ஓரமாக.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.. 4)

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்