விதையின் கனவு!

Dec 20, 2025,01:17 PM IST

- க .யாஸ்மின்சிராஜீதீன்  


விதையில் தொடங்கி விருட்சமாகி 

உலக உயிர்களுக்கெல்லாம் பயன்பட வேண்டும் என 

கனவு கண்டேன்......!!!! 

அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாயே மனிதா..!!! 

விதையின் கனவு கனவாகவே ஆகிவிட்டால்  

கனவு காண உயிர்கள் உலகில் இல்லாமல் போய்விடும் என்பதை ஏன் மறந்தாய்....!!! 

உன் உயிர்வளிக்கு மூன்று விருட்சம் தேவை  என அறிவியல்  எடுத்தியம்புவதை  

நீ அறியவில்லையா...!!!!.

தெரிந்தும்  நமக்கென்ன என 

கடந்து செல்கிறாயா... !!! 

விதை உறங்குவதில்லை

முளைப்பதற்கு முட்டி




மோதிக்கொண்டிருக்கிறது 

மண்ணுக்கடியில்... !!!! 

விருட்சம் விதையின் கனவு ... !! 

வாழ்க்கை மனிதனின் கனவு..!!! 

கனவு காணுங்கள் விருட்சமாவீர்கள் ..!!!

பல தடைகளை தகர்த்து 

இப்படிக்கு விதை....!!!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

news

அச்சச்சோ கரண்ட் போயிருச்சே.. கவலைப்படாதீங்க.. இந்தா பிடிங்க.. இன்ஸ்டன்ட் சட்னி!

news

எதையாவது எழுதலாமே!?

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

உறவுமுறைகளும், இன்றைய குழந்தைகளும்!

news

தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ முழு விபரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்