அதிகாலையில் செம மழை.. ஆனந்தமாய் நனைஞ்சு போன சென்னை!

Aug 29, 2023,09:38 AM IST
சென்னை : சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த மழை மேலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் நேற்று தெரிவித்திருந்தது.

ஆனால் யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அதிகாலை 3 மணி துவங்கி சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. தி.நகர், ராதாகிருஷ்ணன் சாலை, பட்டினப்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

அதேபோல புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. ராத்திரியிலும், அதிகாலையிலும் பெய்த இந்த மழையால் சென்னை குளிர்ந்து போனது.. மக்களும் மகிழ்ந்து போனார்கள்.

இந்த மழையானது இன்றும் தொடரும் என்று தெரிகிறது. இன்று மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஆகஸ்ட் 17ம் தேதி பொதுக்குழுவைக் கூட்ட இது தான் காரணமா?.. டாக்டர் ராமதாசின் அடுத்த அதிரடி

news

காலையில் தினமும் சாப்பிட சூப்பர் ரெசிப்பி.. குயினோவா.. அதாங்க சீமை திணைப் பொங்கல்!

news

உடுமலை அருகே எஸ்ஐ சண்முகவேல் வெட்டிக்கொலை: 5 தனிப்படைகள் அமைப்பு

news

சென்னை கோயம்பேடு சந்தை: இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்

news

வாடிக்கையாளர்களை ஏமாற்றிய தங்கம் விலை... 4வது நாளாக இன்றும் உயர்வு!

news

ஓபிஎஸ் எக்ஸ் பக்கத்தைக் கவனித்தீரா.. 2 நாட்களாக ஒருவரை மட்டுமே வறுக்கிறார்.. யாரைத் தெரியுமா?

news

தவெக மாநில மாநாடு.. புதிய தேதியை அறிவித்த விஜய்.. எப்போது கிடைக்கும் அனுமதி?

news

ராமதாஸ் போன் ஒட்டுக்கேட்பு.. போலீசில் புகார்.. அதிரடி காட்டும் தைலாபுரம்.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையில் தோல்வியுற்ற பாதுகாப்பு ஒத்திகை.. குண்டை கண்டுபிடிக்காத போலீஸார் சஸ்பெண்ட்

அதிகம் பார்க்கும் செய்திகள்