லண்டன்: செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை ஐரோப்பிய நிறுவனம் உறுதி செய்துள்ளது.
பூமியை தவிர வேறு கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? என்பதை பற்றி விஞ்ஞானி ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில், செவ்வாய் கிரகமும் நீண்ட காலமாக கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது.

காரணம், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் மற்றும் வேறு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற ஊகம் இருந்து கொண்டே இருக்கிறது. இதனை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர். தற்பொழுது திரவ வடிவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் நீராதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில், சுமார் 3.7 கிலோ மீட்டர் தொலைவிற்கு, தடிமனான பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என அறியப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐஸ் கட்டிகள் உருகினால், முழு கிரகத்தையும் 1.5 முதல் 2.7 மீட்டர் ஆழத்திற்கு நீர் மூடிவிடும். இது பூமியின் செங்கடலை நிரப்பப் போதுமானதாகும். செவ்வாய் கிரகத்தின் இந்த பகுதியில் இதுவரை காணப்படாத நீர் படலம் இது ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தின் எதிர்கால ஆய்வுக்கு இந்த புதிய கண்டுபிடிப்பு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலை https://www.esa.int/Science_Exploration/Space_Science/Buried_water_ice_at_Mars_s_equator என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}