சென்னை: 2026 க்குப் பிறகு திமுகவின் முழு ஆதரவை பாஜகவுக்கு அளித்து மத்திய அமைச்சர் பொறுப்புகளை பெற திமுக தயாராகிவிட்டது. திமுக எந்த உறுதியான நிலைப்பாட்டிலும் இல்லை. நேரத்துக்கு ஏற்றார் போல நிறத்தையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பவாத கட்சி என்றால் அது திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு மோடி என்றால் பயம், அமித் ஷா என்றால் பயம், அமலாக்கத்துறை பயம், சிபிஐ பயம், வருமானவரித்துறை பயம், ஆளுநர் பயம், ரெய்டு பயம், சின்னம் பறிபோய் விடுமோ என்று பயம் இப்படி எடப்பாடி பழனிசாமியின் பயப்பட்டியல் தெனாலியை விட நீள்கிறது என்று அமைச்சர் கே.என்.நேரு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக டிவி சானல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
திமுகவின் அறிக்கையில் உள்ள அனைத்துக்கும் பொருந்தக்கூடிய ஒரு கட்சி என்றால் அது திமுக தான். கடந்தகால அரசியலில் வரலாற்றைப் பார்க்க வேண்டும். பாஜகவுடன் ஐந்து வருடம் முழுமையாக அந்த ஆட்சியினுடைய சுவையை முழுமையாக அனுபவித்து விட்டு அதன் பிறகு அவர்களை கழற்றிவிட்டனர். 1998 இல் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். ஆனால், காவிரி நதி நீர் பிரச்சனையில் 205 டிஎம்சி தண்ணீர் திறந்து விடும் பிரச்சனையில் நமது உரிமைக்கான பிரச்சனைகளுக்கு மத்திய அரசு அன்று செவி சாய்க்காத சூழலில் அதிமுக பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றார். அதனால், வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்னிலையில் இருந்தது.
அதற்கு முன்பு வரை மறைந்த முதல்வர் கருணாநிதி பாஜக ஒரு மதவாத கட்சி எந்த காலத்திலும் அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்று மூன்று மாதங்களாக கூறி வந்தவர்கள், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து திமுக ஆட்சி சுகத்தை முழுமையாக அனுபவித்தது. திமுகவை பொருத்தவரை எப்போதும் இரட்டை வேடமிடும் கட்சி. சந்தர்ப்பவாத பச்சோந்தித்தனமான அரசியல் செய்வதில் திமுகவினர் கில்லாடி. பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். எந்த அளவுக்கு வேண்டும் என்றாலும் இறங்கி செல்வார்கள்.
ஒரு அமைச்சரை பிரதமர் சந்தித்த வரலாறு உண்டா. தற்போது துணை முதல்வராக இருக்கும் உதயநிதி, பிரதமரை சந்திக்க நேரம் கேட்கிறார். உடனடியாக பிரதமர் மோடியை சந்திக்க உதயநிதிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எந்த மாநில அமைச்சர் பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் முதல்வர் ஸ்டாலின் சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். திமுக- பாஜக இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. 2026க்காக காத்திருக்கிறார்கள்.அதிகாரப் பசி ஏற்பட்டு விட்டது. 2026ல் பாஜக வுடன் திமுக ஐக்கியமாகிவிடும்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஜெயிக்கப் போவதில்லை. ஆனால் 2026க்கு பிறகு திமுகவின் முதல் ஆதரவை பாஜகவுக்கு அழைத்து மத்திய அமைச்சர் பொறுப்புகளை பெறவும் திமுக தலைமை தயாராகிவிட்டது. கார்ப்பரேட் அரசாங்கத்தை நடத்தி வரும் பிரதமர் மோடிக்கு நிதீஷ் குமாரையும், சந்திரபாபு நாயுடு மிரட்டுவதற்கு திமுகவை ஆயுதமாக வைத்துக் கொள்வதற்கு இது வசதியாக இருக்கிறது. திமுக எந்த உறுதியான நிலைப்பாட்டிலும் இல்லை. நேரத்திற்கு ஏற்றார் போல நிறத்தையும் கொள்கைகளை மாற்றிக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பவாத கட்சி என்றால் அது திமுக தான். இதுதான் ஸ்டாலினின் மாடல் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க "நோ" சொல்ல வேண்டிய 5 விஷயங்கள்
தை பிறந்தால் வழி பிறக்கும்... கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன: பிரேமலதா விஜயகாந்த்
ஏன் இந்த அவசரம்...? பாரதிராஜா பற்றி தவறான தகவல்கள் பதிவிடுவோர் கவனத்திற்கு
யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்
தமிழக அரசியலில் அதிரடி: விஜய் முன்னிலையில் தவெகவில் இணையும் திமுக, அதிமுக நிர்வாகிகள்!
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு
இன்று தேசிய பறவைகள் தினம்...பறவைகளின் அருமை உணர்ந்து பாதுகாப்போம்
தங்கத்தின் விலை நிலவரம் என்ன தெரியுமா? இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!
புதுச்சேரியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
{{comments.comment}}