கோகுலாஷ்டமி.. விசுவாவசு வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் கடைசி நாளான ஆடி 31 ஆம் தேதி கார்த்திகை நட்சத்திரம் சேர்ந்து வருவதனால் முருகப்பெருமானுக்கு ஆடி கிருத்திகை நாளாகவும் அமைந்துள்ளது. சனிக்கிழமை நாளன்று கிருஷ்ண பகவானுக்குரிய கோகுலாஷ்டமியும், முருகப்பெருமானுக்குரிய ஆடி கிருத்திகையும் சேர்ந்து வந்திருப்பது மிகவும் சிறப்பான நாளாகும்.
கோகுலாஷ்டமி வழிபாடு செய்யும் நேரம் :ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 01:41 மணி முதல் இரவு 11 :13 மணி வரை உள்ளது. கோகுலாஷ்டமி கொண்டாடுபவர்கள், சனிக்கிழமை முழுதும் கிருஷ்ண பகவானின் திதி யான அஷ்டமி திதி இருப்பதினால் ஜென்மாஷ்டமி எனப்படும் கோகுலாஷ்டமி வழிபாடு செய்து கொண்டாடலாம்.
வட இந்தியாவில் கோகுலாஷ்டமி மிகவும் சிறப்பாகவும், விமர்சையாகவும் கொண்டாடுவார்கள். இந்த நாள் கண்ணனுக்கு விரதம் இருந்து கண்ணனுடைய கால் தடம் பச்சரிசி மாவினால் வீட்டின் வெளிப்புறத்தில் இருந்து பூஜை அறை வரை அவர் நடந்து வருவது போல கோலமிட்டு ,எங்கள் வீட்டுக்கு வா கண்ணா... வா ...என்று அழைத்து, கிருஷ்ணருக்கு பிடித்தமான நெய்வேத்திய பக்ஷணங்களை செய்து, படைத்து கிருஷ்ண பகவான் பஜனைகள் பாடி, ஆடி ,கொண்டாடி மகிழ்வார்கள்.
மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும். எனவே கோகுலாஷ்டமி நாள் திருமணம் ஆகி குழந்தை வரம் தாமதமாகி இருக்கும் தம்பதியர் கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ணரை வழிபட ,விரைவில் கிருஷ்ணரே குழந்தையாக அவர்களுக்கு வந்து அவதரிப்பார் என்பது ஐதீகம்.
கிருஷ்ண பகவான் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. கோகுலாஷ்டமி அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து மாலை வேளையில் பூஜையை தொடங்கி , வழிபாடு செய்து ,மறுநாள் காலையில் பூஜை நிறைவு செய்து கிருஷ்ணருக்கு படைத்த நைவேத்திய பட்சணங்களை முதலில் உண்டு சிலர் வீட்டு வழக்கப்படி பூஜை நிறைவு செய்வார்கள்.
ஆகஸ்ட் 16ஆம் தேதி அஷ்டமி திதியில் அன்று மாலை நேரத்தில் "கோகுலாஷ்டமி "ஆக கண்ணனை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்து, மறுநாள் ஆகஸ்ட் 17ஆம் தேதி ரோகிணி நட்சத்திரம் இருப்பதினால் "கிருஷ்ண ஜெயந்தி"யாக அவரவர் வழக்கப்படி கொண்டாடி மகிழலாம்.
கிருஷ்ண பகவானுக்கு பிடித்த உணவுகள்: வெண்ணெய் ,தயிர், பால் இனிப்பு சீடை ,கார சீடை, அவல் ,முறுக்கு, லட்டு, ஜவ்வரிசி பாயாசம் போன்றவற்றை கிருஷ்ணருக்கு பிடித்தமான உணவுகளை படையல் ஆக படைத்து வழிபடுவதனால் அவருடைய ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
வீடுகளில் பூஜை செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடுகள் செய்து கோகுலாஷ்டமி நன்னாளை கொண்டாடி மகிழலாம். கோகுலாஷ்டமி நாளான இந்த நன்னாளில் கிருஷ்ண பகவான் அனைவருக்கும் நல்வாழ்வு நல்கட்டும் . அனைவருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?
சுதந்திரம் காப்போம்!
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது
கோகுலாஷ்டமி.. ஆடி சனிக்கிழமையில்.. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் விசேஷம்!
சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?
தலைகொடுத்து தாயகத்தை மீட்டுத்தந்த.. தியாகத் தலைவர்களுக்கு.. நன்றி சொல்வோம்!
அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை
தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி
{{comments.comment}}