கம்பு சாதம்.. வெயிலுக்கு இதமானது.. உடலுக்கு நலமானது.. சூப்பரான டேஸ்ட்டும் கூட!

Apr 21, 2025,02:05 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


சென்னை: கடும் கோடைகாலத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவது முக்கியமானது. அந்த வகையில், உயர் ஆற்றல் மிக்க உணவான கம்பு சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள்


கம்பு ஒரு கப்

மாங்காய் பொடி பொடியாக கட் செய்தது அரை கப்

சிறிய வெங்காயம் பொடியாக கட் செய்து அரை கப்

கெட்டியான தயிர் ஒரு பெரிய கப்

உப்பு தேவைக்கு ஏற்ப




செய்முறை


கம்பு நன்றாக கழுவவும். பிறகு அதனை நன்றாக தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைக்கவும். (குறிப்பு :மிக்ஸியில் போடும்பொழுது கல் உப்பு சிறிதளவு போட்டு அரைக்க வேண்டும்)


1. ஒரு குக்கரில் இந்த அரைத்த கம்பை போடவும் 

2. இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும் நன்றாக கிளறி விடவும் கொதி வரும் வரை கிளறவும் அது அப்படியே கெட்டியாகி வரும்.

3. அது கெட்டியான உடன் மேலும் அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கர் மூடி போட்டு மூன்று அல்லது நான்கு விசில் விடவும்.

4. குக்கர் பிரஷர் அடங்கியதும் அதனைத் திறந்து நன்றாக கிளறவும். கம கம வென கம்பு சாதம் வாசனை சூப்பரா இருக்கும்.

5. இந்த கம்பு சாதத்துடன் வடித்த அரிசி சாதம் சேர்த்து சாப்பிட அருமையாக ருசியாக இருக்கும்.

6. ஒரு கப் கெட்டி தயிர், பொடியாக கட் செய்த மாங்காய், சிறிய வெங்காயம் சேர்த்து நன்றாக பிசைந்து கெட்டியாக தயிர் சாதம் போல் இதனை சாப்பிடலாம்..


கம்பு சாதம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!


கம்பு ஒரு உயர் ஆற்றல் உணவு .இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனிமியா  தடுக்கப்படுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.


லிக் நின் என்னும் பைட்டோ நியூட்ரியன் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. கம்பில் உள்ள கரையாத நார்ச்சத்து உணவின் இயக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் பித்த சுரப்பை குறைக்கிறது.


இது ஒரு குறைந்த கலோரி உணவு, உடல் எடையை குறைக்கவும், உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. *பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ தோல் ஆரோக்கியத்திற்கும் கண்பார்வைக்கும் நல்லது.


கோடைகாலத்தில் கம்பு சாதம் போன்ற சிறு தானிய உணவு சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும் இது போன்ற ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

news

பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

news

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

news

தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!

news

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்