விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

May 14, 2026,01:34 PM IST

சென்னை: சட்டசபைத் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு. இதற்காக அடுத்தவர் மீது பழி போட மாட்டேன். நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குறை சொல்வது சரி அல்ல என மாவட்ட செயலார்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகக் கூட்டப்பட்ட இந்த கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் மிகவும் வெளிப்படையாகவும் ஆவேசமாகவும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.


கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தேர்தல் தோல்விக்கு நானே முழுப் பொறுப்பேற்கிறேன். இதில் மற்றவர்களைக் குறை சொல்வதில் எந்தப் பயனும் இல்லை. தோல்விக்கான பொறுப்பை ஏற்பதுதான் முறையான தலைமைக்கு அழகு. கட்சி நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துவதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய போக்கு கட்சிக்கு எந்த நன்மையையும் தராது.




எங்கே கோளாறு நடந்தது? எங்கே மெத்தனப் போக்கு ஏற்பட்டது என்பதுதான் முக்கியம். அதை நாம் நடுநிலையோடு ஆய்வு செய்ய வேண்டும். இது தேர்தல் சுழற்சிதானே தவிர, நாம் எழவே முடியாத வீழ்ச்சி அல்ல. நம்பிக்கையூட்டினார். தோல்வி குறித்து ஆய்வு செய்வது அவசியம் தான், ஆனால் அது அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக்கூடாது.


இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் சமூக வலைதளங்கள் எவ்வளவு பெரிய போர்க்களமாக மாறியிருக்கிறது என்பது நமக்குப் புரிகிறது. டீக்கடைகளில் நாம் பேசிய அரசியலை இனி சமூக வலைதளங்களில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


திமுகவினர் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நமது பரப்புரை பாணி மற்றும் செயல்பாடுகளைக் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். நிர்வாகிகள் அனைவரும் சமூக வலைதளங்களில் நேரடியாகப் பங்கேற்றுச் செயல்பட வேண்டும்.


"கவர்ச்சி மாயாஜால சுனாமி":


தமிழகத்தில் ஒரு "புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி" ஏற்பட்டிருக்கிறது. சுனாமி என்பது ஒரு பேரழிவு போன்றது. அது சாதனைகளையோ அல்லது தகுதியையோ அடிப்படையாகக் கொண்டது அல்ல. நிர்வாகிகளை மாற்றி மாற்றி குறை சொல்லிக் கொண்டே இருந்தால் அதற்கு முடிவே இருக்காது. 


நமது மெத்தனத்தை விடுத்து, எங்கே கோளாறு ஏற்பட்டது என்பதை மட்டும் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். தோல்வியின் போது ஆதங்கத்தைக் கொட்டுவது இயல்புதான், ஆனால் அது கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்கும் வகையில் ஒருவருக்கொருவர் எதிரான பழியாக மாறிவிடக் கூடாது என்று பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


கருத்து கேட்க இணையதளம்: 


தேர்தல் தோல்வி குறித்து தொண்டர்கள் கருத்து சொல்ல ஏதுவாக தனி இணையதளம் தொடங்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுக செய்த தவறுகள் குறித்தும் எதிர்பார்க்கும் மாற்றங்கள் குறித்தும் தொண்டர்கள் கருத்து சொல்லலாம். கள ஆய்வு நடத்தி அறிக்கை தருவதற்காக திமுக சார்பில் குழு அமைக்கப்படும்; குழுவின் அறிக்கையும், மக்களின் கருத்துகளும் கிடைத்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

விஷ்ணுபதி புண்ணிய காலம்.. மகா விஷ்ணுவை எப்போது வழிபடலாம்?

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

மலரே !

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்