தக்காளி விலை கிலோ ரூ. 110.. பேசாம சட்னியை கட் பண்ணிரலாமா.. யோசனையில் இல்லத்தரசிகள்!

Oct 07, 2024,01:41 PM IST

சென்னை:   சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.110த்திற்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வருகிறது. தற்போது வரத்து  குறைந்துள்ளதால், கடந்த மாதம் கிலோ ரூ.20க்கு விற்கப்பட்ட தக்காளி, புரட்டாசி மாதத்தில் ரூ.40க்கு விற்கப்பட்டது. தற்போது ஆங்காங்கே பெய்து வரும் மழை காரணமாக, தற்போது தக்காளி விலை அதிகரித்து ரூ.110த்திற்கு விற்கப்பட்டு வருகிறது. தற்போது, தக்காளி மட்டும் இன்றி தேங்காய் விலையும் கனிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.




வட மாநிலங்களில் தற்போது கடுமையான மழை பெய்து வருவதால் தக்காளி  உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளி உற்பத்தி செய்யும் இடத்திலேயே தக்காளி விலை அதிகரித்திருப்பதால், தற்போது 110த்திற்கு விற்கப்படும் தக்காளி 200 ரூபாய்க்கும் விற்கப்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.


இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்


தக்காளி ரூ. 80-110

இஞ்சி 70-200

நெல்லிக்காய் 70-76 

பீன்ஸ் 38-150

பீட்ரூட் 14-80 

பாகற்காய் 15-30 

கத்திரிக்காய் 15-80

பட்டர் பீன்ஸ் 56-85

முட்டைகோஸ் 15-60

குடைமிளகாய் 10-30

கேரட் 30-82

காளிபிளவர் 20-40

சௌசௌ 10-25

கொத்தவரங்காய் 25-40 

தேங்காய் 40-60 

பூண்டு 180- 450

பச்சை பட்டாணி 130-160 

கருணைக்கிழங்கு 25-50

கோவக்காய் 10-15 

வெண்டைக்காய் 10-20 

மாங்காய் 100-180 

மரவள்ளி 40-55

நூக்கல் 15-40 

பெரிய வெங்காயம் 25-72 

சின்ன வெங்காயம் 25-80

உருளை 30-80

முள்ளங்கி 15-35 

சேனைக்கிழங்கு 60-65 

புடலங்காய் 20-30

சுரைக்காய் 15-30

பூசணி 15-20

முருங்கைக்காய் 30-120


இன்றைய பழங்களின் விலை நிலவரம்


ஆப்பிள் 120-260

வாழைப்பழம்  15-110

மாதுளை 120-300

திராட்சை 70-140

மாம்பழம் 30-200

தர்பூசணி 15-40

கிர்ணி பழம் 25-80

கொய்யா 24-100

நெல்லிக்காய் 25-80



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி

news

74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!

news

தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)

news

கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்