பாட்னா : பீகார் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய இரண்டு மணி நேரத்திலேயே தங்களின் வெற்றியை உறுதி செய்துள்ளது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக கூட்டணியே முன்னிலையில் உள்ளதால் எதிர்க்கட்சிகளுக்கு டெபாசிட்டாவது கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பீகார் சட்டசபையில் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இவற்றில் பதிவான ஓட்டுக்கள் நவம்பர் 14ம் தேதியான இன்று காலை துவங்கி எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையிலேயே இருந்து வருகிறது. பீகாரில் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைப்பதற்கு 122 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
ஆனால் காலை 11 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 193 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணி 47 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பீகாரின் அடுத்த முதல்வர் என பிரச்சாரம் செய்யப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனால் அவரது வெற்றியே கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால் பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய 3 மணி நேரத்தில் தொடர்ந்து பாஜக கூட்டணி முன்னிலையில் வகிக்கும் தொகுதிகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிக்கு மிக சொற்ப இடங்கள் மட்டுமே கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. இதனால் இப்போது வெற்றி பெற போவது யார், ஆட்சி அமைக்க போவது யார் என்ற கேள்டிகளுக்கு பதிலாக எதிர்க்கட்சியில் யாரெல்லாம் டெபாசிட் வாங்குவார்கள் என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.
ஓட்டு திருட்டு, எஸ்ஐஆர் உள்ளிட்ட பலவிதமான பிரச்சாரங்களை எதிர்க்கட்சிகள் முன் வைத்த போதிலும், அதையும் தாண்டி மக்களின் அமோக ஆதரவு பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ளது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பீகார் தேர்தலில் மொத்தமாக எதிர்க்கட்சிகள் துடைத்தெறியப்பட்டுள்ளதால் இனி அடுத்தடுத்த மாநிலங்களில் நடக்க போகும் சட்டசபை தேர்தல்களில் பாஜக.,வின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறந்தது புத்தாண்டு.. இந்தியா முழுவதும் கொண்டாட்டம்.. மக்கள் மகிழ்ச்சி வெள்ளம்
100 கோடி நன்கொடை! கான்பூர் ஐஐடி மாணவர்கள் செய்த நெகிழ்ச்சியான செயல்!
டிக் டிக் டிக்... கடிகாரம் மாட்டும் திசையை வைத்து வீட்டின் நன்மைகள் இருக்காம்... இதோ முழு விபரம்!
தானத்தில் சிறந்த தானம் எது தெரியுமா?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
முக்கிய முடிவுகள்?.. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜன. 6ல் அமைச்சரவைக் கூட்டம்
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
உலகில் புத்தாண்டு முதலில் பிறக்கும் நாடு... கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது தெரியுமா?
{{comments.comment}}