அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

Jun 11, 2025,11:23 AM IST

சென்னை: ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். அதை நிரூபித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்.


தான் பெற்ற குழந்தை உடல் நலம் சரியில்லாமல் அழுது கொண்டே இருந்ததால் ஆத்திரத்தில் அவர் செய்த காரியம் இன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்தப் பெண்ணே இப்போது தான் செய்த செயலை நினைத்து கதறிக் கொண்டிருக்கிறார்.


சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருபவர் அருண். இவர் ஒரு டிரைவர். இவரது மனைவிதான் பாரதி. இந்தத் தம்பதிக்கு கடந்த ஏப்ரலில் இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. இரு தேவதைகள் ஒரு சேர வந்ததால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய அருண் - பாரதி தம்பதியினர் குழந்தைகளை  கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர். 


இந்த நிலையில் சம்பவத்தன்று தனது இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் பாரதி ஒரு புகார் கொடுத்தார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். 




அப்போது அருண்- பாரதி தம்பதி வசித்து வந்த வீட்டுக்கு அருகே ஒரு பாழடைந்த வீட்டு மனையில் ஒரு குழந்தை கிடந்தது தெரிய வந்தது. அதை மீட்டு விசாரித்தபோது அது காணாமல் போனதாக கூறப்பட்ட பாரதியின் குழந்தை என்று கண்டுபிடித்தனர் போலீஸார். இதையடுத்து உடனடியாக பிரேதப் பரிசோதனைக்கு உடல் அனுப்பப்பட்டது. விசாரணையில் தலையில் அடிபட்டு குழந்தை இறந்திருப்பதாக தெரிய வந்தது.


இப்போது போலீஸாருக்கு பாரதி மீது சந்தேகம் வந்தது. அவரிடம் மீ ண்டும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தான்தான் குழந்தையைக் கொன்று விட்டதாக கூறி அதிர வைத்தார் பாரதி. இரு குழந்தைகளில் ஒன்றுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் போய் வந்துள்ளது. சம்பவத்தன்று அந்தக் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாரதி, கோபத்தில் குழந்தையை தூக்கி, ஒரு கட்டப் பையில் வைத்து 2வது மாடியிலிருந்து வீசியுள்ளார். இதில் குழந்தை அடிபட்டு இறந்து போனது. 


பாரதி சொன்ன இந்த வாக்குமூலத்தைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள். போலீஸார் தற்போது பாரதியைக் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

news

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேட்ட கேள்வி.. திமுகவை நோக்கி திருப்பி விடும் அதிமுக!

news

2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

news

குடியிருப்புகளுக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதை கைவிட வேண்டும்: சீமான்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

அதிர்ஷ்டமதை அறிவிக்கும் குடுகுடுப்பைக்காரன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்