- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
மரபுக்கவிதை என்று ஒன்றுண்டு ...
அக் கவிதைக்கோர் மரபும் உண்டு
யாப்பின் இலக்கணம் பொருந்தியே ...
எழுதிட அது தான் மரபுமே...
இலக்கண விதியோடு
உன் கற்பனை வளமும்...
உணர்ச்சிப் பெருக்கும் கலந்திட்டால்
அது அமிர்தமே...
எழுத்து அசை சீர் தளை அடி தொடை இவற்றோடு...
இனிமையான ஓசை நயம் கூட்டி..
சந்தங்களோடு சிந்து பாடுவதே....
மரபுக் கவிதை என்று ஆகுமே...

எதுகை மோனை வார்த்தைகளோடு..
ஒத்த ஓசை சொற்களையும்
ஒருங்கே கவிதையில் கொண்டு வந்து ...
மரபுக் கவிதை புனைவோமே...
கவிதையின் மரபு காப்போமே...
கவிஞர்கள் நமக்கும் இதில் பொறுப்புண்டு..
இப்படியான கவிதைகள் அதிகம் படைத்தால்
மரபுக் கவிதைக்கு சிறப்புண்டு..,
மரபுக் கவிதை என்று ஒன்று உண்டு ...
கவிதைக்கோர் மரபும் உண்டு...!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}