நீதி சொல்ல இத்தனை நூல்களா.. தமிழின் தனிப்பெருமை.. உங்களுக்குத் தெரியுமா?

Jan 23, 2026,09:53 AM IST
- ஆ.வ.உமாதேவி

நீதி நூல்கள் என்பவை மனித வாழ்வை அறவழியில் வழி நடத்தக்கூடியவை ஆகும். இவை ஒழுக்கம், அன்பு, கருணை, இரக்கம் போன்ற நற்பண்புகளை, போதிக்கும் நூல்களே நீதி நூல்கள் ஆகும். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் தேவையான நற்கருத்துகளை வழங்குவதால் நம் வாழ்க்கை முழுமைக்கும் தேவையான ஒன்றாக உள்ளன. 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் 11 நூல்கள் நீதி நூல்களாகும். இவை வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை சிறு பாடல்களின் மூலம் எளிமையாக கூறி, நல்லொழுக்க நெறிகளை வழங்கி மனித வாழ்வை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உதவுகின்றன. 

இளம் வயதில் கற்கும் செய்திகள் பசுமரத்தாணி போல் மனதில் பதியும் என்பதால், இத்தகைய நன்னெறி நூல் கருத்துகளை இளம் பிராயத்தில் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தல் நம்மைப் போன்ற ஆசிரியர்களின் கடமையாகும். இவை பிற்காலத்தில் அன்பு, கருணை, நன்றி போன்ற பண்புகளை வளர்த்து அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ வழிகாட்டுகின்றன. சமூகத்தில் நல்லொழுக்கத்தையும் ஒழுக்க நெறிகளையும் நிலை நாட்ட உதவுகின்றன. தனிமனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் தேவையான கல்வியையும் பண்புகளையும் போதிக்கின்றன.

குழந்தைகளுக்கான நீதி நூல்கள்: 



1. திருக்குறள் 

இதனை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறளுக்கு உலகப் பொதுமறை, முப்பால், தெய்வ நூல், பொய்யாமொழி, உத்தரவேதம், வாயுறை வாழ்த்து, தமிழ்மறை, திருவள்ளுவம் என பல பெயர்கள் உள்ளன. அறம், பொருள், இன்பம் வீடு சார்ந்த அனைத்து வாழ்வியல் அற கருத்துக்களையும் அனைவருக்கும் பொதுவாக அளிக்கும் நூலாகும். 

2. நாலடியார் 

இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நூலாகும். 4 அடி வெண்பாக்களை கொண்ட நூல். திருக்குறளுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் நீதி நூல். இது நாலடி நானூறு மற்றும் வேளாண் வேதம் என்றும் அழைக்கப்படுகிறது. இது திருக்குறளை போலவே அறம், பொருள், இன்பம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. 

ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி  என்ற பழமொழியில் திருக்குறள் மற்றும் நாலடியார் இடம்பெற்றுள்ளது. 

3. நான்மணிக் கடிகை 

இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார் ஆவார். இந் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்கள் கூறப்படுவதால் இப்பெயர் பெற்றது. இது கடவுள் வாழ்த்து உட்பட நூற்றி இரண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்டது. 

4. இன்னா நாற்பது

இந்நூலை எழுதியவர் கபிலர். இது துன்பத்தைத் தரும் செயல்களைப் பற்றி 40 வெண்பாக்களில் விளக்கும் அறநூல் ஆகும். சமூகத்தில் மக்கள் செய்யக்கூடாத செயல்களை நான்கு நான்காக பிரித்துக் கூறுவதால், இந்நா நாற்பது என பெயர் பெற்றது. இது மக்களின் ஒழுக்கத்தை பேணவும் துன்பத்தை தவிர்க்கவும் வழிகாட்டும். 

5. இனியவை நாற்பது

இந் நூலை இயற்றியவர் பூதஞ்சேந்தனார். இதில் நல்ல இனிமையான, வாழ்வின் இன்பம் தரும் செயல்கள் குறித்து 40 வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் வாழ்க்கையின் நல்ல செயல்களை போதித்து நடுநிலையுடன் வாழ வழிகாட்டி, நல்லறங்களை வலியுறுத்துகின்றன.

மீதியுள்ள ஆறு நீதி நூல்களின் கருத்துக்களை, அடுத்த பகுதியில் காண்போம். 

(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

news

கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!

news

கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்