நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு..!

Mar 17, 2025,01:51 PM IST

சென்னை: சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார் அப்பாவு.


தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சனிக்கிழமை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 17ஆம் தேதி ஆன இன்று  பட்ஜெட் மீதான உறுப்பினர்களின் விவாதம் இந்த விவாதத்தின் போது உறுப்பினர்களின் கருத்துக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசுவார். பின்னர் துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும்.


இந்நிலையில், இன்று காலை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். கேள்வி நேரம் முடிவடைந்ததும், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சபாநாயகர் பதவியிலிருந்து அப்பாவுவை நீக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் அளித்திருந்தார்.




இதையடுத்து இன்று அது விவாதத்துக்கு வந்தது. விவாதத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டியை நடத்துமாறு கேட்டுக் கொண்ட அப்பாவு அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதையடுத்து விவாதம் தொடங்கியது. விவாதத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது,  சபாநாயகர் அப்பாவு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். குறிப்பாக சபை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்ய சபாநாயகர் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.


இதற்கு முன்பு இருந்த சபாநாயகர்களை விட இப்போது உள்ள சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படுகிறார். அரசு மீது குற்றம் குறை காண முடியாதவர்கள் சபாநாயகர் மீது குறை சொல்கிறார்கள்.  சபாநாயகர் அப்பாவு ஜனநாயக ரீதியாக செயல்படக் கூடியவர். அவர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை அறிந்து நான் வருத்தமடைந்தேன் என்று கூறினார் முதல்வர். அதன்பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.  அதில் தீர்மானம் தோல்வி அடைந்தது. 


இந்த நிலையில் தற்போது டிவிஷன் வாக்கெடுப்புக்கு அதிமுக தரப்பு கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்றது. டிவிஷன் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் தீர்மானத்துக்கு எதிராக 154 பேரும், ஆதரவாக 63 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சபாநாயகராக  அப்பாவு இருக்கையில் அமர்ந்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சட்டம் - ஒழுங்கு என்ற சொல்லை உச்சரிக்கக் கூட ஸ்டாலின் அரசுக்கு தகுதியில்லை: அன்புமணி ராமதாஸ்!

news

அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

news

ரஜினி, சூர்யா, தனுஷ் படங்களுக்கு புது செக் வைத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.. ஒத்து வருமா?

news

துள்ளுவதோ இளமை புகழ் நடிகர் அபிநய் காலமானார்.. கல்லீரல் நோயால் மறைந்த சோகம்!

news

அதிமுக கூட்டணி.. வருவதற்கு யோசிக்கும் தவெக விஜய்.. எடப்பாடி பழனிச்சாமியின் திட்டம் என்ன?

news

திமுகவை வீழ்த்த நினைத்தால்.. நடிகர் விஜய் இதை செய்ய வேண்டும்.. தமாகா தலைவர் ஜி கே வாசன் யோசனை

news

SIR.. தேர்தல் ஆணைய திட்டத்தை எதிர்த்து.. திமுக சார்பில் நாளை மாநிலம் தழுவிய போராட்டம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 10, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரப் போகும் ராசிகள்

news

ஐப்பசி மாத தேய்பிறை சஷ்டி.. நல்ல ஆரோக்கியத்தையும் ஆன்மீக சக்தியையும் அளிக்கும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்