சென்னை: சானிடைசர் வாங்க அடையாள அட்டை கட்டாயம் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷசாரயம் குடித்து 51 பேர் உயிரிழந்த நிலையில், இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளசாராய விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தின் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாரய ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முற்றிலும் ஒழிக்கும் வகையில் அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

அதன் படி அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கள்ளச்சாராயம், மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் அதிரடியாக இறங்கியுள்ளனர். மாவட்டந்தோறும் இந்த ரெய்டுகள் நடந்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து மருந்து கடைகளில் சில பொருட்களை வாங்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி தனி நபர்களுக்கு அதிகளவு சானிடைசர் விற்கும் மருந்துக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆல்ஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள 37,000 மருந்து கடைகளுக்கும் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
"எப்போ தான் சார் பேசுவீங்க?"...கேள்விகளால் விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
மீண்டும் அதிரடியாக உயரும் தங்கம் விலை...போட்டி போட்டு உயரும் வெள்ளி
தங்கத்திற்கு நிகராக உயர்ந்த மல்லிகைப் பூ விலை: ஒரு கிலோ ரூ.10,000
தேமுதிக கூட்டணி...சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா...ஆவேசத்தில் ரகசியத்தை உலறிய விஜயபிரபாகரன்
கேரளா கிரைம் ஸ்டோரி (2)
இயந்திரமாகிப் போன மனிதர்கள்.. Men Become Machines and vice versa
பிழை இல்லா உலகம் பேரொளியாய் விளங்கும்...!
மன்னிப்பின் சக்தி.. The Power of Apology
3 பழம்.. 2 காய்.. ஜூஸ் சாப்பிட்டுப் பாருங்க.. புற்றுநோய்க்கே நல்ல மருந்தாம்!
{{comments.comment}}