- பாவை.பு
சென்னை: சமீபத்தில் மத்திய அரசு, PNG (Piped Natural Gas) எனப்படும் குழாய் வழி இயற்கை எரிவாயுக்கு மாற மக்கள் முன்வர வேண்டும். அப்படி மாறத் தகுதியுள்ளவர்கள் மாறத் தவறினால், அவர்களுக்கான LPG (Liquefied Petroleum Gas) சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதனால் இந்த எச்சரிக்கை?
வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர் போர் பதற்றம் காரணமாக, LPG தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. நமது எரிபொருள் தேவைக்கு மேற்கத்திய நாடுகளையே பெரிதும் சார்ந்திருக்கும் நிலையில், போர் நீடித்தால் தட்டுப்பாடு இன்னும் அதிகரிக்கும். இதனைத் தவிர்க்கவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் மத்திய அரசு PNG பயன்பாட்டை வலியுறுத்துகிறது.
பிஎன்ஜி என்றால் என்ன?

பைப்ட் நேச்சுரல் கேஸ் என்பதைத்தான் இவ்வாறு சொல்கிறோம். அதாவது குழாய் மூலமாக நமது வீட்டு சமையலறைக்கு இயற்கை எரிவாயு எரிபொருள் வந்து விடும். குழாய்கள் மூலமாக தருவதால் இதற்கு இந்தப் பெயர்.
இந்தியாவில் தற்போது 32.97 கோடிக்கும் அதிகமானோர் LPG இணைப்புகளைப் பயன்படுத்துகின்றனர். பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மட்டும் சுமார் 10.33 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 33 கோடிக்கும் அதிகமான நுகர்வோரை எல்பிஜி சென்றடைகிறது.
உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இதன் பயன்பாடு மிக அதிகம். இன்டேன், பாரத் கேஸ், எச்பி கேஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
LPG vs PNG: என்ன வித்தியாசம்?
இரண்டுமே இயற்கை எரிவாயுதான். இரண்டுமே சமையல் எரிவாயு தான். ஆனால் மூலக்கூறு வெவ்வேறு.. LPG என்பது புரோப்பேன், பியூட்டேன், குறைந்த அளவில் ஐசோபியூட்டேன் மற்றும் ஹைட்ரோகார்பன் வாயுக்களை பயன்படுத்தி தயாராகிறது. இது மணமற்றது. இதனால் வாயுக் கசிவை கண்டறிய மெர்காப்டன் சேர்க்கப்படுகிறது. அடர்த்தியான தன்மை கொண்டதால் காற்றில் எளிதில் கரையாது, பாதுகாப்பற்றது.
PNG எனப்படுவது 95 சதவீதம் மீத்தேன் குறைந்த அளவில் ஈத்தேன், புரோபேன், பியூட்டேன் அதற்கும் குறைவாக ஹைட்ரோ கார்பன் உள்ளது.. இது காற்றை விட லேசானது.. வேகமாக காற்றில் கரையும் தன்மை கொண்டது, மிகவும் பாதுகாப்பானது.
பிஎன்ஜி இணைப்புக்கு மாற விரும்புவோர், முதலில் தங்களது பகுதியில் அந்த இணைப்புக்கான கட்டமைப்பு இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். இருந்தால் அதற்கு விண்ணப்பிக்கலாம். எல்பிஜியை விட பிஎன்ஜி விலை குறைவானதும் கூட. 24 மணி நேரமும் கிடைக்கக் கூடியதும் கூட.
நகர்ப்புறங்களில் பிஎன்ஜி இணைப்பு பெற வசதியுள்ள மக்கள் அனைவரும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் அந்த இணைப்பிற்கு மாற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம், கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புறங்களில் தடையின்றி எல்பிஜி விநியோகம் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி அவசியத்தையும், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைப்பதையுமே இது வலியுறுத்துகிறது...
Cute Short Story: டீ தட்டை!
சொற்களில் தட்டிப் பதறும்.. சுடிதாரின் விளிம்புகள்!
புராணங்கள் நிறைந்தது பண்டைய பாரதம்... விரோதங்கள் நிறைந்தது இடைக்கால பாரதம்!
Short Story: காசேதான் கடவுளடா!
சிவபெருமானின் காலை தன் தலையில் தாங்கி தீட்சை பெற்ற திருநாவுக்கரசர்!
கடவுளோடு கைகுலுக்கு இந்திரனிடம் ஏதாவது கேள்
Happay Independence Day: 80 ஆண்டுகள் தொட்டு விட்டோம்.. எழுச்சி எண்ணம் தொடர்ந்திட்டோம்!
சுதந்திர தினம்.. அச்சத்தை மடமையாக்கி அறவழியில் வாழ்ந்தவனே !
அன்னையைப் போற்று
{{comments.comment}}