சென்னையில்.. இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.. பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலேயே!

Sep 10, 2024,10:39 AM IST

சென்னை:   பருவமழை குறைந்ததால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அநேக இடங்களில் வறண்ட வானிலேயே நிலவும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிக பலத்த மழை வெளுத்து வாங்கியது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. பெரும்பாலான பகுதிகளில்  வறண்ட வானிலை நிலவி வந்தது.




இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாடு மழை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் அடுத்த இரண்டு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்.


குறிப்பாக சென்னையில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி, வால்பாறை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் பருவமழை குறைந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை அச்சமூட்டும் வகையில் இருக்காது என தெரிவித்துள்ளார். 


இது தவிர கேரளாவில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பருவமழை குறைந்ததால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கு மிகப்பெரிய மழை வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்