- மொழிப்பித்தன் இரா.ச.குமார்
கொஞ்சமாய் எதார்த்தம்
நிறைய கற்பனை
தேவைக்கேற்ப வர்ணனை
இவ்வளவே
இந்த
எளிய சமன்பாடே கவிதை...
--
சுருக்கி எழுதுவதிலென்ன
சுவாரஸ்யம்
சற்றே நீளமாக்கு...
--

மாதிரிக்கு ஒன்று
நீள இரவென்பதை
நீளமான இரவெனலாம்...
--
தூறலென எழுது
தோன்றி மறையும் மின்னலை கட்டமை
மழைச் சூழலை விவரி
கருமுகிலென எழுது
இறுதி வரிக்குள்
ஆகாயத்தையே பிளக்கும்
அந்த இடியையும் இறக்கு...
--
அத்தியாயங்களை பத்திகளாக்கு
வார்த்தைகளை
துண்டாடு
சொல்ல வந்ததை
வரிகள் வழி விளக்கு...
--
எதுவும் கவிதையாகலாம்
இங்கே
எந்த சொல் வீண்?
கண்டதை கவிதைக்குள் துருத்து
வார்த்தை செய்
வரி வரியாய் பிரி...
--
விமர்சிக்கப்படுகிறாயா?
நீ அங்கீகரிக்கப்படுகிறாயென பொருள்
விமர்சித்தமைக்கு
நன்றி சொல்
இனி
எழுது எழுது
ஆக
நீயும் கவிஞனே...
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}