- கி. அனுராதா
இப்பொழுது அனைத்து ஆசிரியர்களும் சீதாவை பாராட்ட ஆரம்பித்தனர். பத்தாம் வகுப்பு என்பதால், சீதாவை அதிக மதிப்பெண் எடுக்குமாறு அறிவுரைக் கூறினர். இவ்வாறாக சீதா மிகவும் பரிட்சைக்கு தன்னை ஆயுத்தப் படுத்திக் கொண்டாள். தன் தோழிகளுக்கும் உதவிச் செய்தாள். மேலும் தன் அண்டை வீட்டில் உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கும் அனைவருக்கும் தேர்ச்சிப் பெற வழி வகுத்தாள்.
தேர்வு நேரம் நெருங்கியது. சீதா மிக சிரத்தையுடன் தேர்வினை எழுதி முடித்தாள். விடுமுறையில் கணினி பயின்றாள். தேர்வின் முடிவு அறிவிக்கும் நாள். அனைவரும் ஆர்வத்தின் உச்சக் கட்டத்தோடு எதிர்ப்பார்த்து இருந்தனர். சீதாவின் மதிப்பெண் 400 கும் கீழ் இருந்தது. மிகுந்த ஏமாற்றம். மறு பரிசீலனைக்கு பரிந்துரைக் கடிதம் மற்றும் பதினோராம் வகுப்பிற்கான நுழைவு படிவம் சீதாவிடம் கொடுத்து பெற்றோரின் கையொப்பம் இட வேண்டும் என்று கூறினர்.
சீதாவின் வீடு இருந்த தெருவில் அனைவரும் 350க்கு கீழ் மட்டுமே எடுத்தனர். ஆகையால் சீதாவிற்கு நல்ல முறையில் வரவேற்பு கிடைத்தது. பக்கத்து வீட்டு சுதா மாமி வீட்டிலேயே லட்டு செய்து சீதாவின் மதிப்பெண்ணை கூறி அனைவருக்கும் கொடுத்தார். பூ விற்கும் பெண்மணி சீதாவை பாராட்டி பூக்களை தலையில் சூட்டினார். மற்றொரு வீட்டின் சாவித்திரி அத்தை அன்று இரவு உணவு சமைத்து சீதாவிற்கு கொடுத்தார். இது போல தங்களால் இயன்ற பரிசினை சீதாவிற்கு வழங்கினர்.

இன்ப வெள்ளத்தில் சீதா திக்கு முக்காடினாள். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை, விடிந்ததும் பெற்றோரிடம் நடந்தவைகளைக் கூறி கையெழுத்துக்காக அருகில் நின்றாள். சீதாவின் அம்மா பெண் பிள்ளைக்கு இந்த படிப்பு போதும் மேற்கொண்டு தேவையில்லை என்றுக் கூறி இரண்டு விண்ணப்பப் படிவங்களை கிழித்து விட்டார். சீதாவிற்கோ பூமியே பிளந்தது போல இருந்தது. அழுதாள், தவித்தாள், புலம்பினாள், கெஞ்சினாள் எதுவும் நடைபெறவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எவ்வளவோ எடுத்துரைத்தனர்.
உறவினர்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சீதாவின் தாயாருக்கு எடுத்துரைத்தனர். யார் பேச்சையும் கேட்கவில்லை. சிஸ்டர் நிர்மலாவிடம் செய்தி சென்றது. பதறிய சிஸ்டர் மற்றும் இதர ஆசிரியர்கள் சீதாவின் பெற்றோரை பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு தங்களால் இயன்ற அளவு கூறினர். இறுதியில் சிஸ்டர் நிர்மலா தங்களது மதச் சங்கம் மூலம் சீதாவிற்கு படிப்பு செலவுக்கு தேவையானதை பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
அதற்கு சீதாவின் தாயார், படிக்க வைத்தால் போதுமா அதற்கு ஏற்றார் போல் மாப்பிள்ளை தேட வேண்டும், சீர் செய்ய வேண்டும். பத்தாவது என்றால் அதற்கேற்றார் போல் மாப்பிள்ளை பார்த்து தள்ளி விட்டால் அடுத்து இருக்கும் இரு மகள்களை வளர்க்க ஏதுவாக இருக்கும் என்று திடமாக கூறி பள்ளியை விட்டே வெளியேறி விட்டார். சீதாவிற்கு உயிர் இருந்தும் இல்லாதது போல் இருந்தது. சீதாவின் வாழ்வின் அடுத்த கட்டம் என்ன?
(தொடரும்)
(கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}