எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)

Dec 20, 2025,04:55 PM IST

- கி. அனுராதா


பணிக்கு அழைத்தது மிகப் பிரபலமான ஐந்து நட்சத்திர உணவகம் மற்றும் விடுதிகள் நடத்தும் நிறுவனம். அதனால் மகளின் வாழ்க்கை பாதிக்கக் கூடும் என்று மறுத்து விட்டார். 


மேலும் அந் நிறுவன மேலாளர் சீதாவின் தந்தையிடம், சீதா உணவகத்தில் வேலை செய்ய போவதில்லை. எங்கள் அலுவலகத்தில் அவளுக்கென்று ஒரு அறை கொடுப்போம். அங்கிருந்து தான் வேலை செய்வாள். வெளியில் யார்க்கும் தெரியாது. அவள் மேற்படிப்பை நாங்களே பொறுப்பேற்கிறோம். மேலும் காலை மதியம் உணவு கூட நாங்களே கொடுத்து விடுவோம். இத்தனைக் கூறியும் சீதாவின் தந்தை மனம் இறங்கவில்லை. 


அம்மேலாளர் சீதாவை தனியே அழைத்து , அம்மா! உன் வருங்காலத்தை பார். எங்கள் அலுவலகத்தில் பணி புரிந்தால் உனக்கான மேற்படிப்பு நாங்களே ஏற்றுக் கொள்வோம். உன் விருப்பம் போல் படிக்கலாம், அது மட்டுமல்லாமல் உன் ஊதியம் ஏறிக் கொண்டே இருக்கும்.  அதன் பின் உன் படிப்புக்கு ஏற்ற மாதிரி வேலையும் மாறும். அப்பொழுது ஊதியம் இரட்டிப்பாகும். இன்று அம்மா அப்பா இருப்பார்கள், நாளை உனக்கு எதாவது செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் நிற்பாயா,  யோசி! உனக்கு வேண்டியதை நீயே வாங்கலாம். உன் குடும்பத்திற்கு , உன் தங்கைகளுக்கு வாங்கி தரலாம் என்று அறிவுரைக் கூறிச் சென்றனர்.




இம்முறை சீதாவின் வெற்றிப் படிக்கட்டுகளை சீதாவின் அப்பா உடைத்து விட்டார். சீதாவிற்கு திருமண ஏற்பாடு தயாரானது. நிர்மலா சிஸ்டர் அந்த குடும்பத்திடம் பேச முனையும் போது அது ஆணாதிக்க சமூகம் சார்ந்த குடும்பம் என்று அறிந்து ஒதுங்கி விட்டார்.  மீண்டும் மீண்டும் சீதாவின் வாழ்வில் பலத்த அடி.

 

சீதா தன் குழந்தையை தூக்கிக் கொண்டு தாய் வீட்டிற்கு வரும் போது அவள் தோழிகளின் கைகளில் புத்தகத்தைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சுடன் கண்களில் வழிந்தோடிய நீரை துடைத்துக் கொள்வாள். ஆனால் அவள் தோழிகளோ , எல்லோருக்கும் வகுப்பு எடுத்து நல்ல பெயர் பெற்றால் பட்டம் கிடைத்து விடுமா என்று கிண்டல் அடித்தனர். எரியும் ஆழ்மனதில் அவர்கள் எண்ணெயை ஊற்றினர்.  யாரிடம் பேசினாலும் ஏச்சு பேச்சுதான் கிடைத்தது. செய்வது அறியாமல் தன் விதியின் வழியே நடந்தாள்.


இரண்டாவது குழந்தையும் பிறந்தது.  மெல்ல தைரியத்துடன் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படிக்க ஆரம்பித்தாள்.  முதுகலைப் பட்டம் பெற்றார்.  அத்துடன் ஓயவில்லை. இரண்டாவது முதுகலைப் பட்டம் பெற்றார், மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டு இருந்தாள். அப்பொழுது லக்ஷ்மி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் சீதாவிடம் பட்டம் என்பது அந்த வயதில் படித்தால் வேலை கிடைக்கும் ஆனால் இப்பொழுது உனக்கு தேவை குடும்பம் நடத்த பணம். அதற்கு தக்கபடி நடந்துக்கொள் என்றார்.


அதை சரி என்று சீதாவும் கவரிங் நகைகள் செய்வது, மெழுகுவர்த்தி செய்வது, வீட்டிற்கு தேவையான பொருட்களை செய்வது என கற்றுக் கொண்டாள். அனைவரும் அவளை பாராட்ட ஆரம்பித்தனர்.  இப்பொழுது சீதாவின் வாழ்க்கை மேல் நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தது.


(கி. அனுராதா ஒரு ஆசிரியை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எம்.ஏ பட்டங்களைப் படித்துள்ளார். இந்தியில் பிஏ முடித்துள்ளார். இதுதவிர 7 டிப்ளமோக்களும் இவரது கல்விச் சொத்தில் அங்கம். 2 பெண் குழந்தைகள், கணவர் விவசாயி. ரத்னா செந்தில்குமாரின் திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு

news

தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

news

தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!

news

பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்

news

பிரியாவிடை!

news

திருமாலுக்கு உகந்த துளசியின் தெய்வீக மகிமை!

news

Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!

news

Short Story by Joseph Samraj: என் பெயர் ரவி!

அதிகம் பார்க்கும் செய்திகள்