கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் : உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்

Jun 20, 2024,12:32 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இறந்த 35 பேருக்கு இன்று கூடிய தமிழக சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் நேற்று முதலில் உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து 35ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.




இந்த சம்பவம் தற்போது பூதாகரமாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட காவல்துறையின் பலர் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கள்ளச்சாராயம் விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 2000 மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், சென்னையில் தமிழக சட்டமன்ற சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. குவைத் நாட்டில் தீ விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும் சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.


இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ராசாயனம் கலந்த சாராயம் குடித்த காரணத்தினால், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அறிந்து இப்பேரவை அதிர்ச்சியும், துயரமும் கொள்கிறது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சமூகத்தை பாழ்படுத்திய இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்