சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நிலவி வந்த வெயிலின் தாக்கம் தற்போது குறைந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக மதுரையில் கடந்த ஒரு வாரமாக கடுமையாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று திடீரென வானில் மேகங்கள் திரண்டு நல்ல மழை பெய்தது. அதேபோல் விருதுநகர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் உள் தமிழக பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று கனமழை:
கோவை, நீலகிரி, திருப்பூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன மழை:
கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
{{comments.comment}}