Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 09, 2024,01:27 PM IST

சென்னை:  தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் தமிழ்நாட்டில் ஆறு நாட்கள் கன  கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வடகடலோர மாவட்டங்கள்,டெல்டா மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது.இதனால் அணைகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த மழை மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்வதால் பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, குளுகுளுவென இதமான சூழல் நிலவி வருகிறது.


வங்கக்கடலில் நாளை  உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: 




இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இந்த காற்று சுழற்சி அடுத்த 36 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.தொடர்ந்து இந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி வரும் நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மேற்கு திசையில் தமிழ்நாடு-இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். மேலும் இது வலுவான காற்று சுழற்ச்சியாகவோ தாழ்வு பகுதியாகவோ மாறி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரப்படுத்தும் என கணித்துள்ளது.


தமிழ்நாட்டில் ஆறு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: 


இதன் காரணமாக தமிழ்நாட்டில் 9, 10, 11,  13,14, 15, ஆகிய 6 நாட்கள் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 12ஆம் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென்கிழக்கு அரபிக் கடலில் காற்று சுழற்சி: 


இதற்கிடையே தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை

news

தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!

news

இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு

news

Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!

news

Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!

news

தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!

news

“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!

news

நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?

news

North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்