சென்னை: தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 26, 27, 28, ஆகிய மூன்று நாட்களுக்கு மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும் என்பதால் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.
இதற்கிடையே நாளை மறுநாள் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரு தினங்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மழை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக தமிழ்நாட்டில் நவம்பர் 25ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
26, 27, 28 ஆகிய மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது .
நவம்பர் 25 ஆம் தேதி கனமழை:
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஆகிய 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
26 ஆம் தேதி மிக கனமழை:
கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
26 ஆம் தேதி கன மழை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது
27ஆம் தேதி மிக கனமழை:
விழுப்புரம் கடலூர் நாகை மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
27ஆம் தேதி கனமழை:
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், ஆகிய 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
28ஆம் தேதி மிக கனமழை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28ஆம் தேதி கனமழை:
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை,நாகை, திருவாரூர், ஆகிய 10 மாவட்டங்களில் 28ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மழை:
சென்னையில் நவம்பர் 27 மற்றும் 28ஆம் தேதி கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
டெல்லியில் முதல் முறையாக செயற்கை மழை...காற்றின் தரத்தை சீராக்க புதிய முயற்சி
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவள்ளூருக்கு ஆரஞ்சு...சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
{{comments.comment}}