செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானுக்கு தை கிருத்திகை .. சிறப்புகள்!

Jan 27, 2026,02:48 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 2026 ஜனவரி 27 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை தை மாதம் 13ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரம் அமைந்துள்ளது. செவ்வாயின் அதிபதியான முருகப்பெருமானுக்கு தை கிருத்திகை இன்று செவ்வாய்க்கிழமை அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.


முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் சஷ்டி விரதமும் கிருத்திகை விரதமும் சிறப்பு வாய்ந்தவை. உத்திராயண புண்ணிய காலத்தில் தொடக்கமாக வரும் தை மாத கிருத்திகை மற்றும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் தொடக்கமான ஆடி மாத கிருத்திகை ஆகியவை மிகுந்த சக்தி வாய்ந்த முருகன் விரதங்கள் ஆகும். குழந்தை வரம் வேண்டி முருகனுக்கு தை கிருத்திகை அன்று விரதம் இருந்து மனமார முருகனை வழிபடுவதனால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


நிலம்,சொத்து, வீடு உள்ளிட்ட அசைவில்லாத சொத்துகளுக்கு செவ்வாய் கிரகமே அதிபதி.எனவே நிலம் தொடர்பான வம்பு வழக்குகள் தீரவும் வீடு வாங்க சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர, செவ்வாயின் அதிபதியான முருகனை தை கிருத்திகை  அன்று விரதம் இருந்து முருகனை வழிபட பிரச்சினைகள் ஒவ்வொன்றாக தீரும் என்பது நம்பிக்கை.

 

தை கிருத்திகை 20 26 நேரம்:




கிருத்திகை நட்சத்திரம் ஆரம்பம் ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை 11 :08 மணி முதல் ஜனவரி 28 புதன்கிழமை காலை 9:26 மணி வரை. இது தை மாதத்தின் மிக முக்கிய முருக வழிபாட்டு நாள் ஆகும்.


தைப்பூசம் பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருவதை தொடர்ந்து, தைப்பூசத்திற்கு விரதம் இருப்பவர்கள் தை கிருத்திகை ஆன இன்றிலிருந்து ஆறு  நாட்கள் விரதம் கடைபிடிக்கலாம்.


குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சஷ்டி திதியில் விரதம் இருப்பதை போன்று இந்த தை மாத கிருத்திகையில் விரதம் அனுஷ்டிப்பதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கார்த்திகை, சிவனிடம் வரம் பெற்ற நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதனால் சிவபெருமானின் அருளும் கட்டாயம் கிடைக்கும். முருகப்பெருமான் சிவனின் அம்சமாக விளங்குபவர் என்பதால் இந்த விரதமும் மிகவும் சக்தி வாய்ந்த விரதங்களில் ஒன்று ஆகும். முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பு செய்யும் விதமாக கார்த்திகை நட்சத்திரம் முருகனுக்கு உரிய நட்சத்திரமாகவும், இன்று முக்கிய விரத நாளாகவும் அமைந்துள்ளது.


திருமண தடை உள்ளவர்கள், வேலை கிடைக்க, நீள் ஆயுள், உயர்பதவி அடைய வேண்டும் என வேண்டுபவர்கள்,பண பிரச்சனைகள்,கடன் தீர, என தங்கள் வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் தேவர்கள், தெய்வங்களை வழிபட்டு தங்களுக்கு வேண்டிய வரங்களை வேண்டியபடி கேட்டு பெற்ற காலமான தை மாதத்தில் அமைந்துள்ள தை கிருத்திகை அன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட அனைவரது வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். கட்டாயம் முருகப் பெருமான் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார்.


முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திர தினத்தன்று கூற வேண்டிய மந்திரம் "ஓம் வன்னிதே ஹாயை வித்மஹே  மஹா தபாயை தீமஹி   தந் நோ  கிருத்திக:  ப்ரசோ தயாத்"


இம்மந்திரத்தை 9 அல்லது 27 முறை கூற முருகன் அருள் கிடைக்க பெறலாம்.


மேலும் இதுபோன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Dr APJ Abdul Kalam: ஆன்மிக பூமியில் முளைவிட்ட அறிவியல் பயிர்.. அப்துல் கலாம்!

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

news

Monday Motivation: எழுதுகோலின் விண்ணப்ப மனுவும்... மறுமொழியும்!

news

நடிகர் ராம்சரணுக்கு கோவை மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை

news

அதிமுக கூட்டத்திலிருந்து திடீரென வெளியேறிய கே.சி.வீரமணி: மீண்டும் பரபரப்பு

news

கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி போராட்டம் எதிரொலி.. பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்

news

என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்

news

நான் யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்.. என்னைக் குறை கூறுவது நியாயமா.. சோனம் வாங்சுக்

news

இன்று முதல் நான் அரசியல் துறவறம் பூணுகிறேன்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்