சென்னை: தைப்பூச தினத்தை முன்னிட்டு இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் அரோகரா முழக்கங்கள் விணணைத் தொடுகின்றன. பக்தர்கள் அலை அலையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் அனைத்து முருகன் ஸ்தலங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் தினங்களில் தைப்பூசத் திருநாள் மிகவும் முக்கியமான நாளாகும். தைப்பூசம் அன்று முருகப்பெருமானை வழிபடுதல் மிகவும் சிறப்பு. தைமாத முழுபௌர்ணமி நாளில் வரும் பூச நட்சத்திரம் அன்று தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் முருகனை வழிபடுவதால் கல்வி ஞானம் செல்வம் என மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் பாதை யாத்திரையாகவும் கிரிவலம் வந்தும் முருகப்பெருமானை தரிசிக்கின்றனர். அதே சமயத்தில் பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்துதல், காவடி எடுத்தல், என தங்களின் நேர்த்திக் கடன்களையும் செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு வருகின்றனர். இதனால் பொதுவாகவே தைப்பூசத் திருநாளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வது வழக்கம்..
தைப்பூச திருநாளை முன்னிட்டு இன்று முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் பாலபிஷேகம், பன்னீர் அபிஷேகம், செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் காட்சியளித்து வருகிறார். இதனைக் காண பக்தர்கள் ஏராளமான பக்தர்கள் சாரை சாரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதே சமயத்தில் பால்காவடி, பறவை காவடி, அழகு குத்துதல் என தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் எவ்வித இடையூறும் ஏற்படாமல் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை காவல்துறை செய்து வருகிறது.
அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். அதேபோல் கிரிவலமாக நடந்து வந்தும், பாதயாத்திரையாக நடந்து வந்தும் காவடி எடுத்தும் அரோகரா கோஷமிட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் மலையை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேரம் அதிகரிக்க அதிகரிக்க பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய சுமார் மூன்றிலிருந்து நாலு மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். திருத்தணி மலை முழுவதும் பக்தர்களின் தலைகளாக காட்சியளிக்கிறது.
அதேபோல் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலையில் பக்தர்கள் பாதையாத்திரையாக நடந்து வந்தும், கிரிவலம் வந்தும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. அதேபோல் பக்தர்கள் காவடி எடுத்தும்,அழகு குத்தியும் பாதயாத்திரையாக நடந்து வந்து பழனி மலை முருகனை வழிபட காத்திருக்கின்றனர். வழி நெடுகியிலும் அரோகரா கோஷம், விண்ணை பிளக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் . நிற்பதற்கு கூட கால் வைக்க முடியாத அளவிற்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
தைப்பூசத் திருநாளில் முருகனை வழிபட கூட்டம் அதிகரித்து வருவதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் சண்முக நதியில் குளித்துவிட்டு அங்கிருந்து காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்களுக்கும் இலவச பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மூன்று நாட்களுக்கு சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டு அனைத்து வழிகளிலும் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, தோரணமலை, கழுகுமலை, சிறுவாபுரி முருகன் கோவில், சென்னை வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தைப்பூசத் திருநாள் களைகட்டி உள்ளது. அனைத்து முருகன் கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
வெளிநாடுகளிலும் கோலாகல கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கூட தைப்பூசத் திருவிழா களை கட்டியுள்ளது. மலேசியாவின் பத்துமலை திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து பத்துமலை முருகனை தரிசித்து வருகின்றனர்.
இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழா களை கட்டியுள்ளது. இதுபோன்று தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாட்டு ஸ்தலங்களிலும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}