- கலைவாணி ராமு
சின்ன சின்ன விளக்குகள்... சிங்கார விளக்குகள்....
வண்ண வண்ண விளக்குகள்.....
வகை வகையான விளக்குகள்....
கண்னை கவரும் விளக்குகள்....
கார்த்திகை தீப விளக்குகள்...
வினாயகர் விளக்கில்
முழு முதல்வனை வரவேற்று....
அஷ்டலட்சுமி விளக்கில்
லட்சுமியை அழைத்து....
முற்றத்தில் மாக்கோலம்
கலர் கோலம் போட்டு.....

தீப ஔியில்
மின்னும் வீடுகள்....
விளக்கேத்தும்
பாவையர்களின்
விளக்கின் ஔிக்கு நிகராகும்....
குயவர்களின் கைவண்ணம்
விளக்குகளின்
வடிவத்தில் பிரதிபலிக்கும்.....
பனம்பூவை சுட்டு ..
தூளாக்கி கட்டி...
கார்த்தி சுற்றும் அழகோ அழகு தான்....
அதில் விழும்
தீபாபொறி நம்
மனங்களில்
மத்தாப்பாய் சிரிக்கும்....
கார்த்திகை
மாதம் வந்தாலே
எங்கும் பக்தி பரவசமே....
தீபத் திருநாளில்
இருளை அகற்றி மின்னும் பூவுலகம்......
விண்ணுலகத்திற்க்கு
நிகராக மின்னும் அனைவரின் வீடுகளிள் ஔிரும் தீபம்!
(கலைவாணி ராமு, புதுச்சேரியைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்)
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
{{comments.comment}}