- கலைவாணி கோபால்
திருச்செந்தூர்: ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே உள்ள கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு வருவதால் பக்தர்கள் கடலில் இறங்க முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். கிட்டத்தட்ட 5 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்செந்தூர் கடலில் புனித நீராடுவது என்பது பக்தர்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. திருச்செந்தூர் கடலில் குளித்தால் நமது கஷ்டங்கள் தீரும், என்ற நம்பிக்கை உடன் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில் சுமார் 50 மீட்டர் தூரமும் 5 அடி உயரத்திற்கும் அங்கு மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. பெரிய பள்ளம் போல இது காணப்படுகிறு. இதனால் பக்தர்கள் சாதாரணமாக கடலில் இறங்கி குளிக்க முடியாத ஒரு சூழலை உருவாக்கி உள்ளது. கிட்டத்தட்ட பக்தர்கள் 100 மீட்டர்தொலைவில் உள்ளே போய் புனித நீராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடலில் ஏற்படும் இந்த மண் அரிப்பை தடுக்கும் பொருட்டு 30 கோடி ரூபாய் செலவில் ஏற்கனவே கற்கள் போட்டு கட்டமைப்பு செய்த போதிலும், மறுபடியும் கடல் உள்வாங்கி ஐந்து அடி உயரம் மண் அரிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மாற்று ஏற்படும் செய்யும் வகையில் இந்து அறநிலைத்துறை, பக்தர்கள் சிரமம் இன்றி கடலில் நீராடுவதற்கும் தக்க நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஆலோசித்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்
ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
துரோகி என்றால் நான் விலகிக் கொள்கிறேன்.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன்: ஜி.கே.மணி!
திருச்செந்தூர் கடலில் தொடரும் மண் அரிப்பு.. 5 அடி உயரத்திற்கு பள்ளம்.. பக்தர்கள் அவதி
தங்கம் விலையில் புதிய உச்சம்... சவரன் ஒரு லட்சத்தை நெருங்கியது தங்கம்!
மாற்றம் ஒன்றே மாறாதது.. உலகம் எவ்வளவு மாறிப்போச்சு பாருங்கோ!
என்னது.. தமிழ் பேசினால் ஆயுள் அதிகமா?
உன்னால் முடியாதது ஏதுமில்லை பெண்ணே!
சரமாரியாக சுட்ட நபரை.. துணிச்சலுடன் பிடித்து மடக்கிய முஸ்லீம் வியாபாரி.. குவியும் பாராட்டுகள்
{{comments.comment}}