- ஆ.வ. உமாதேவி
எனது ஊர் எனது பெருமை!
இங்கு வீசும் காற்று தென்றலாய் இருக்கும். என்னை சுமக்கும் மண், மணம் வீசும். நான் குடிக்கும் நீர், என்னை வாழ வைக்கிறது. எனது ஊரின் பெருமையை நான் சொல்லாமல் வேறு யார் சொல்வார்?
முருகனின் ஐந்தாம் படை வீடான "திருத்தணிகை" தான், நான் வாக்கப்பட்ட மண். இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இங்கு சுற்றுலா தளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இது ஒரு மலைக்கோயில் ஆகும். இங்குள்ள 365 படிகள் ஆண்டின் 365 நாட்களை குறிக்கின்றன.
முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தல மாகவும் கருதப்படுகிறது. அருணகிரிநாதர் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும். சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலமாகும். கோபம் தணிந்ததால் தான், திருத்தணிகை என பெயர் பெற்றது. பின்னாளில் மருவி, "திருத்தணி" என்றானது. இந்த இடம், மன அமைதி மற்றும் வாழ்வில் நிம்மதி வேண்டுபவர்களுக்கு மிகவும் முக்கியமான தலமாக கருதப்படுகிறது. இங்கு ஆடி கிருத்திகை விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை காணும் பொங்கல் அன்று முருகப்பெருமான் நம்மை காண கீழே வந்து, வீதி உலா வருவார். அன்று ஊர் முழுவதும் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.

அடுத்து டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் நினைவகம் நமது திருத்தணியில் உள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ஆன டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த இடம் திருத்தணியில் தான் உள்ளது. அவர் படித்த தொடக்க, உயர்நிலைப்பள்ளி இன்றும் அவர் பெயரிலேயே சிறப்பாக இயங்குகின்றது. இவை நூற்றாண்டை கடந்த உன்னத பள்ளிகளாக செயல்படுகிறது. அவர் வாழ்ந்த வீடு, நூலகமாகவும் சிறார் காப்பகமாகவும் செயல்படுகிறது. அவருடைய வீடு அமைந்துள்ள தெருவுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு" என்று பெயரிடப்பட்டுள்ளது.
திருத்தணி நந்தி ஆற்றங்கரையில் மிக மிகப் பழமையான விராட் டேசுவரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷ வழிபாடும் அன்னாபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெறும். திருத்தணியை சுற்றிலும் பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள சிவன் கோயில்கள் மிகவும் பழமையானவை. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தவை. திருத்தணியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் முருக்கம்பட்டு கிராமம் உள்ளது. இங்குள்ள சிவன் கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பழமை உடையது.
முருகன், தன் தந்தையைக் காண, தன் கால்களால் நடந்து வந்ததாக, தலபுராணம் கூறுகிறது. எனவே தான் இவ்வூருக்கு "முருகனது திருவடிப்பட்டு" என பெயர் வந்தது. காலப்போக்கில் மருவி "முருக்கம்பட்டு" என்று ஆகிவிட்டது. இவ்வளவு பெருமைமிகு ஊரில் நான், ஆசிரியராக பணிபுரிவது நான் பெற்ற பாக்கியமே.. மறக்காம எங்க ஊருக்கு வாங்க.. முருகன் அருள் பெற்றுச் செல்லுங்கள்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகிறார்)
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}