- ஸ்வர்ணலட்சுமி
திருவெம்பாவை 14 :
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

பொருள் :
ஆண்கள் காதுகளில் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் பட்டு ஆட, அவர்களின் தங்க நகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் அணிந்திருந்த மலர்களின் வாசனையை தேடி வண்டுகள் வந்து ஆடிக் கொண்டிருக்கின்றன. வேதமாகவும், வேதங்களின் பொருளாகவும் விளங்கும் சிதம்பரத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிற சிவ பெருமானின் பெயரை சொல்லி நீராடுங்கள்.
ஜோதி வடிவமாக திருவண்ணாமலையில் காட்சி தரும் அந்த சிவபெருமானின் பெருமைகளை எல்லாம் சொல்லி பாடிடுங்கள். அவனது மார்பில் தவந்து ஆடும் கொன்றை மாலையின் மகிமை போற்றி பாடுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழை பாடிடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மை பிரிக்கும் பரம்பொருளாகிய வளையல்கள் அணிந்த தாயை விட தாராள குணம் கொண்ட அந்த சிவனின் பாதமலர்களை பாடி நீராடி, பிறவி பெருங்கடலில் இருந்து விடுபடுங்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அவளுக்கென்று ஓர் ஆசை!
Short Story: நம்பிக்கையே நிம்மதி!
மீன்கொத்திப் பறவை!
அது போதும் எனக்கு!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
இட்லிக்கடை.. ஒரு நிமிடக் கதை (36)
{{comments.comment}}