தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு நவம்பர் 01 ம் தேதி, சனிக்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
விசுவாவசு வருடம், ஐப்பசி 15 ம் தேதி சனிக்கிழமை
ஏகாதசி. இன்று காலை 04.31 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. பகல் 02.47 சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 06.02 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.47 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : 10.45 முதல் 11.45 வரை ; மாலை 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு, வர வேண்டிய பணம் வசூலாகும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். திருமணம் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு, உத்தியோகத்தில் அவர்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் அதிக ஆர்டர்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள். பெண்களுக்கு இடுப்பு, கை, கால் வலி மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் நீங்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்கள், வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவார்கள். பிள்ளைகள் உதவுவார்கள். அரசு காரியங்களில் அலட்சியம் காட்டக்கூடாது. மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
கடகம் - கடக ராசிக்காரர்கள், வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். உத்தியோகத்தில் அமைதியான சூழல் நிலவும். வேலையில் கணவரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பண வரவு தாமதமாகலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் பச்சை.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்கள், இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். மனக்குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்தனை செய்வது நல்லது. பல காரியத் தடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு, காத்திருந்த விசா கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலிடத்தினரிடம் பகைத்துக் கொள்ள வேண்டாம். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். பழைய பிரச்சனைகளைத் தீர்ப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவார்கள். பண விஷயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கரும்பச்சை.
துலாம் - துலாம் ராசிக்காரர்களுக்கு, காதலர்கள் மீண்டும் இணைவார்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் நன்மை உண்டு. பிள்ளைகள் வெளிநாடு செல்வார்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களை நம்ப வேண்டும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சாம்பல்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்கள், குடும்பத் தலைவிகள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பார்கள். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாளுவார்கள். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள். உடல் நலம் சீர்பெறும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் கடல்நீலம்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு, தேவையற்ற மனபயம் விலகும். நவீன பொருட்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவார்கள். பிள்ளைகள் சொல்வதைக் கேட்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.
மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு, நல்ல வரன் அமையும். அக்கம் பக்கத்தினருடன் நட்பு பலப்படும். கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். நண்பர்களிடம் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களால் நன்மை உண்டு. உடல் வலிமை உண்டாகும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் நீலம்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு, நடைபாதை வியாபாரிகள் செழிப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தொழிலதிபர்களிடமிருந்து வேலையாட்கள் தொழில் யுக்திகளைக் கற்றுக் கொள்வார்கள். பங்குச் சந்தை லாபம் தரும். உடன்பிறந்தோர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சிப்பார்கள். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு, பயணங்களால் ஆதாயம் உண்டு. தம்பதிகளின் அன்யோன்யம் பெருகும். பிரிந்த உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். இவர்களின் அதிர்ஷ்ட நிறம் வெள்ளை.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}