தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி 16 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், தை 03 ம் தேதி வியாழக்கிழமை
காணும் பொங்கல். உழவர் திருநாள். காலை 04.44 வரை துவிதியை, பிறகு திரிதியை. பகல் 12.54 வரை ஆயில்யம், பிறகு மகம் நட்சத்திரம் உள்ளது. பகல் 12.54 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
சந்திராஷ்டமம் - பூராடம், உத்திராடம்
இன்றைய ராசிபலன் :
மேஷம் - சாதகமான நாளாக இருக்கும். இருந்தாலும் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். நண்பர்களின் உதவியால் வருமானம் அதிகம் அதிகரிக்கும். உங்களுக்காக நேரத்தை செலவிடுங்கள்.
ரிஷபம் - இன்று சில சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கலாம். பணிச்சுமை அதிகரிக்கலாம். பெற்றோரின் உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிலும் நிதானம் அவசியம். நண்பர்களின் ஆதரவு ஆறுதலாக இருக்கும்.
மிதுனம் - நம்பிக்கை அதிகரிக்கும். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும்.
கடகம் - மனதில் குழப்பம் ஏற்படலாம். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். செலவுகளும் மற்றொரு புறம் அதிகரிக்கலாம். பேச்சில் நிதானம் வேண்டும். வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நலம்.
சிம்மம் - படிப்பு, எழுத்து போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். வாகன யோகம் அமையும். தொழிலில் நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் வேண்டும். அறிவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
கன்னி - வேலையில் பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் அனுகூலமாக அமையும்.முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரலாம். வருமானம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. அன்புக்குரியவர்களின் ஆதரவு மனதிற்கு புதிய உற்சாகத்தை தரும்.
துலாம் - சாதகமான நல்ல நாளாக இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள நினைப்பீர்கள். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது.
விருச்சிகம் - மங்களகரமான நாளாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கை துணை ஆதரவாக இருப்பார். குடும்பத்தில் அமைதி ஏற்படும். தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு வரும்.
தனுசு - சுமாரான நாளாக இருக்கும். செலவுகள் அதிகரிப்பதால் கவலை அடைவீர்கள். தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். நம்பிக்கை அதிகமாக இருந்தாலும் பதற்றத்துடன் காணப்படுவீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.
மகரம் - நம்பிக்கை அதிகரிக்கும். தாயின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் உயர்வு ஏற்படும். லாப வாய்ப்புகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும். நல்ல செய்திகள் தேடி வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம் - உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வீட்டை மாற்றி அமைக்க முயற்சி செய்வீர்கள். தொழில் ரீதியாக வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீனம் - சோதனைகள் நிறைந்த நாளாக இருக்கும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். காயங்கள் ஏற்படலாம். எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனமுடன் இல்லா விட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Good மாத்ரே, பிரேவிஸ், ஹூடா அதிரடி.. Bad துபே, தோனி.. Ugly கடைசி வரிசை வீரர்கள்.. CSK ஏமாற்றம்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}