மூன்றாம் ஆடி வெள்ளி.. வளர்பிறை அஷ்டமி.. ஆகஸ்ட் முதல் நாளே சிறப்பு .. மிக சிறப்பு!

Aug 01, 2025,12:23 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஆகஸ்ட் முதல் நாள்: விசுவாசி வருடம் 20 25 ஆகஸ்ட் மாதம் முதல் தேதி ஆன இன்று மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையும்  வளர்பிறை அஷ்டமி திதியும் அமைந்திருப்பது மிகவும் விசேஷமான நாளாகும்.


ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் சக்தியை பல்வேறு வடிவங்களில் வழிபாடு செய்வார்கள் .மூன்றாம் ஆடி வெள்ளி ஆன இன்று  அனைத்து மாரியம்மன், காளியம்மன் , சவுண்டம்மன் கோவில்களில் அபிஷேகங்கள் , அலங்காரம், பூஜைகள் என என விசேஷமாக நடைபெறுகின்றன.


பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கு இணங்க ராகி மாவினால் கூழ் செய்து மோர் கலந்து நைவேத்தியமாக படைத்து பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவது மாரியம்மன் கோவில்களில்  பிரசித்தமாக  நடைபெறும் வழக்கமாகும்.




சேலத்தில் அமைந்திருக்கும் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் பண்டிகை மற்றும் இங்கு அமைந்திருக்கும் அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் மாரியம்மன் பண்டிகை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆடி மாதத்தில் ஊரே திருவிழா கோலமாக காட்சியளிக்கும்.


ஆடி மாதம் நீர்  தேவதைகளை வணங்குவதற்கு ஏற்ற காலம் .இம்மாதத்தில் சக்தி தேவியின் சக்தி அதிகரித்து இருக்கும் . மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று தைரியம் மற்றும் அதீத சக்தியின் தெய்வமான காளிகாம்பாள் தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.


அம்மனுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் ,பருப்பு சாதம், எலுமிச்சை சாதம் ,தயிர் சாதம், அக்காரவடிசல் போன்ற அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப பிரசாதமாக செய்து படையல் இட்டு பெண்கள் விரதம் இருந்து வழிபடுவர். 


பெண்கள் அனைவருக்கும் பிடித்தமான வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதால் குடும்ப ஒற்றுமை ,மகிழ்ச்சி, ஆரோக்கியம் ,செல்வ செழிப்பு ,வாழ்க்கை தரம் மேலோங்கும் .இம்மாதம் கோமாதா வழிபாடு செய்வது அவற்றுக்கு தீவனம் கொடுப்பது அதீத நன்மை பயக்கும். லட்சுமியின் அம்சம் பொருந்திய நாளான வளர்பிறை ஆடி வெள்ளி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபடுவதும் சிறப்பு .இதனால் கடன் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும்.


வீடுகளில் பூஜை அறையில் அம்மன் படமோ அல்லது உருவச்சலையோ இருந்தால் அலங்கரித்து சிகப்பு மலர்கள் வைத்து , மஞ்சள் ,குங்குமம் ,சந்தனம் இட்டு ,வெற்றிலை, பாக்கு ,பழம் ,வைத்து அவரவர் நிலைமைக்கு ஏற்ப நைவேத்தியம் செய்து, தீப தூப ஆராதனை செய்து வழிபாடு செய்வது சிறப்பு.


மேலும் மங்களகரமான பொருட்கள் இன்று வாங்குவது சிறப்பு .பூஜை பொருட்கள், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய கல் உப்பு வாங்குவது சிறப்பானதாகும். பெண்கள் அபிராமி அந்தாதி ,லலிதா சகஸ்ரநாமம் படிப்பது குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட வழிவகுக்கும். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!

news

10 ஆண்டுகளில் முதல் முறையாக... சென்னை மெட்ரோ ரயிலில்... ஜூலை மாதத்தில் 1 கோடி பேர் பயணம்!

news

சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்ட கவினின் உடல்... நேரில் அஞ்சலி செலுத்த வந்த அரசியல் தலைவர்கள்!

news

எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதத்தால்.. ஓபிஎஸ்ஸை இழக்கும் பாஜக.. ஆட்டம் காணுகிறதா கூட்டணி?

news

6 மாவட்டங்களில் இன்றும்... 8 மாவட்டங்களில் நாளையும்... கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம்!

news

கோச்சுக்காதீங்க.. சமாதான முயற்சியில் பாஜக...முடிவில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?

news

முதல்வரை சந்திக்க நான் நேரம் கேட்டேனா.. யார் சொன்னது?.. டாக்டர் ராமதாஸ் மறுப்பு

news

பாஜக.,வுடன் கூட்டணியா?.. வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்லை.. வைகோ பளிச் பதில்!

news

எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

அதிகம் பார்க்கும் செய்திகள்